2024 மே 08, புதன்கிழமை

டி கியா ஒப்பந்தத்தை நீடிப்பதில் உறுதி

Editorial   / 2018 ஓகஸ்ட் 15 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டட்டின் கோல் காப்பாளரான டேவிட் டி கியா, மன்செஸ்டர் யுனைட்டட்டில் தொடருவதற்கான புதிய நீண்ட கால ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவார் என மன்செஸ்டர் யுனைட்டட் நம்பிக்கையுடன் காணப்படுகின்றது.

மன்செஸ்டர் யுனைட்டட்டுடான டேவிட் டி கியாவின் தற்போதைய ஒப்பந்தம் அடுத்தாண்டு முடிவடைகின்றபோதும் குறித்த ஒப்பந்தத்தை மேலுமொரு பருவகாலத்தால் நீடிப்பதற்கான தெரிவை மன்செஸ்டர் யுனைட்டட் கொண்டுள்ளது.

இந்நிலையில், 2015ஆம் ஆண்டிலிருந்து டேவிட் டி கியாவை கைச்சாத்திடுவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்திய லா லிகா கழகமான றியல் மட்ரிட், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சியின் கோல் காப்பாளரஆன திபோ கோர்துவாவை கைச்சாத்திட்டையடுத்தே, டேவிட் டி கியாவின் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை ஆரம்பிப்பதில் மன்செஸ்டர் யுனைட்டட் ஆர்வமாகவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X