2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

டெல்லிக்குத் திரும்புகிறார் தவான்?

Editorial   / 2018 ஒக்டோபர் 31 , பி.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில், டெல்லி டெயாடெவில்ஸ் அணி சார்பாக அறிமுகத்தை மேற்கொண்ட ஷீகர் தவான், அவ்வணிக்காக அடுத்தாண்டு விளையாடவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சண்றைசர்ஸ் ஹைதரபாத் அணியில் இவ்வாண்டு விளையாடிய தவான், டெல்லி டெயாடெவில்ஸ் அணியின் விஜய் ஷங்கர், அபிஷேக் ஷர்மா, ஷபாஸ் நதீம் ஆகிய வீரர்களுடன் பரிமாறப்பட்டுக் கொண்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.

இந்தியன் பிறீமியர் லீக்கின் ஆரம்ப 2008ஆம் ஆண்டு பருவகாலத்தில் டெல்லி டெயாவில்ஸ் அணிக்காக விளையாடியிருந்த தவான், அடுத்த இரண்டு ஆண்டுகள் மும்பை இந்தியன் அணிக்காக விளையாடியிருந்ததுடன், பின்னர் டெக்கார் சார்ஜர்ஸ் அணிக்காக ஓராண்டு விளையாடியிருந்ததுடன், 2013ஆம் ஆண்டில் சண்றைசர்ஸில் தவான் இணைந்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .