2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

டொட்டென்ஹாமை வென்றது சிற்றி

Editorial   / 2018 ஒக்டோபர் 30 , பி.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற போட்டியொன்றில் போட்டியின் ஆரம்பத்தில் றியாட் மஹ்ரேஸ் பெற்ற கோலால் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரை மன்செஸ்டர் சிற்றி வென்றது.

தொழில்முறையிலான அமெரிக்க கால்பந்தாட்ட லீக்கொன்றான தேசிய கால்பந்தாட்ட லீக்கின் பிலடெல்பியா ஈகிள்ஸ், ஜக்சன்வில்லே ஜக்குவார்ஸ் அணிகளுக்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை போட்டி நடைபெற்ற வெம்ப்ளி மைதானத்திலேயே குறித்த போட்டியும் இடம்பெற்ற நிலையில், இப்போட்டியின் பிற்பாடாக மைதானம் மோசமாகக் காணப்பட்டதால் இரண்டு அணி வீரர்களும் மிகக் கவனமகாகவே குறித்த போட்டியில் விளையாடியிருந்தனர்.

எவ்வாறெனினும் சக மன்செஸ்டர் சிற்றி முன்கள வீரரான ரஹீம் ஸ்டேர்லிங்கிடமிருந்து பெற்ற பந்தை போட்டியின் ஆறாவது நிமிடத்தில் றியாட் மஹ்ரேஸ் கோலாக்கியிருந்த நிலையில், குறித்த கோலுடன் 1-0 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றி வென்றிருந்தது.

இன்னொரு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லெய்செஸ்டர் சிற்றியினதும் முன்னாள் வீரரான மஹ்ரேஸ், தான் பெற்ற குறித்த கோலை, கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்டிருந்த லெய்செஸ்டர் சிற்றி அணியின் உரிமையாளர் விஷை ஶ்ரீவத்தனாபிரஹாவுக்கு அர்ப்பணித்திருந்தார்.

லெய்செஸ்டர் சிற்றி அணியின் மைதானத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற அவ்வணிக்கும் வெஸ்ட் ஹாம் யுனைட்டெட் அணிக்குமிடையே இடம்பெற்ற பிறீமியர் லீக் போட்டி முடிந்த பின்னர், அம்மைதானத்திலிருந்து மேலெழும்பிய ஹெலிகொப்டர் சில நிமிடங்களிலேயே வீழ்ந்திருந்த நிலையிலேயே விஷை ஶ்ரீவத்தனாபிரஹா, அவரின் உதவியாளர்கள் இருவர்கள், விமானி, துணை விமானி உள்ளிட்டோர் கொல்லப்பட்டிருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .