2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தென்னாபிரிக்காவின் பயிற்சியாளராக கிப்ஸனின் பதவிக்காலம் முடிவடைந்தது

Editorial   / 2019 ஓகஸ்ட் 05 , பி.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவின் பயிற்சியாளராக ஒட்டிஸ் கிப்ஸனின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததுடன், அவருக்கு நீடிப்பொன்றை தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை வழங்கியிருக்கவில்லை.

இதேவேளை, தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையால் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றின்படி இந்தியாவுக்கான சுற்றுப்பயணத்துக்கு தற்காலிக அணித்தலைவரொருவர் நியமிக்கப்படலாம் என்ற நிலையில், தென்னாபிரிக்காவின் அணித்தலைவராக ஃபப் டு பிளெஸியின் பதவிக்காலமும் முடிவுக்கு வருகின்றது.

இந்நிலையில், புதிய மீள்கட்டமைப்பின் அங்கமாக பயிற்சியாளர்கள், அணித்தலைவர்கள் நியமிப்பது, அணியின் அனைத்து விடயங்களுக்கும் பொறுப்பானதாக கால்பந்தாட்டத்தைப் போன்று அணி முகாமையாளர் நியமிக்கப்படவுள்ளார்.

அந்தவகையில், பயிற்சியாளர்கள், வைத்திய அதிகாரிகள், நிர்வாக அதிகாரிகள் என்போர் நேரடியாக முகாமையாளருக்கு கீழ் இருப்பார்கள் என்ற நிலையில், அவர் பிரதம நிறைவேற்றதிகாரிக்கு கீழ் இருக்கும் கிரிக்கெட்டுக்கான பணிப்பாளரின் கீழ் இயங்கவுள்ளார்.

குறித்த புதிய கட்டமைப்பை தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் பணிப்பாளர்கள், தமது கடந்த வார கூட்டத்தின்போது அங்கிகரித்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .