2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நாப்போலி – டொரினோ போட்டி சமநிலை

Editorial   / 2019 பெப்ரவரி 18 , பி.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற டொரினோவுடனான போட்டியை நாப்போலி சமநிலையில் முடித்துக் கொண்டது.

இப்போட்டியின் முதற்பாதியில், சக மத்தியகள வீரர் பபியான் ரூய்ஸ் வழங்கிய பந்தை, கோல் கம்பத்திலிருந்து ஆறு அடி தூரத்துக்குள்ளிருந்த நாப்போலியின் முன்கள வீரர் அர்க்கடியுஸ் மிலிக், கோல் கம்பத்துக்கு வெளியே செலுத்திருந்தார்.

பின்னர், இரண்டாவது பாதியில், நாப்போலிக்கு கிடைத்த சிறந்த கோல் பெறும் வாய்ப்பொன்றாக, அவ்வணியின் முன்கள வீரர் லொரென்ஸோ இன்சீனியாவுக்கு வாய்ப்பொன்று கிடைத்தபோதும் அவரது உதை கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியிருந்தநிலையில், இறுதியில் 0-0 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது.

அந்தவகையில், ஏ.சி மிலன், பியொரென்டினா அணியின் மைதானங்களில் அவ்வணிக்களுக்கெதிராக நடந்த போட்டிகளில் 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் போட்டிகளை முடித்திருந்த நாப்போலி, இப்போட்டியிலும் அதே முடிவையே பெற்றிருந்தது.

இதேவேளை, தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற சம்ப்டோரியா அணியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் இன்டர் மிலன் வென்றது. இன்டர் மிலன் சார்பாக, டனிலோ டி அம்புரோசியோ, றட்ஜா நைன்கொலன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, சம்ப்டோரியா சார்பாகப் பெறப்பட்ட கோலை மனோலோ கப்பியாடினி பெற்றிருந்தார்.

இந்நிலையில், 1-2 என்ற கோல் கணக்கில் ஜெனோவாவிடம் லேஸியோ தோல்வியடைந்திருந்தது.

அந்தவகையில், இப்போட்டிகளின் முடிவில் இத்தாலிய சீரி ஏ புள்ளிகள் பட்டியல் பின்வருமாறு,

  1. ஜுவென்டஸ் 66 புள்ளிகள்
  2. நாப்போலி 53 புள்ளிகள்
  3. இன்டர் மிலன் 46 புள்ளிகள்
  4. ஏ.சி மிலன் 42 புள்ளிகள்
  5. றோமா 38 புள்ளிகள்
  6. அத்லாண்டா 38 புள்ளிகள்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .