2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நியூசிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்டில் தடுமாறுகிறது இங்கிலாந்து

Editorial   / 2018 மார்ச் 25 , பி.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஒக்லன்டில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்த முதலாவது டெஸ்டில் இனிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க நாளைய ஐந்தாவதும் இறுதியுமான நாளில் 7 விக்கெட்டுகள் கைவசமிருக்க 237 ஓட்டங்களைப் பெறவேண்டியுள்ளது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இங்கிலாந்து, ட்ரெண்ட் போல்டின் 6, டிம் செளதியின் 4 விக்கெட்டுகளால் சகல விக்கெட்டுகளையு வெறும் 58 ஓட்டங்களுக்கு முதலாவது இனிங்ஸில் சுருண்டிருந்தது.

இதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த நிலையில் இப்போட்டி விரைவாக முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் மழை காரணமாக இரண்டாவது நாளில் 23.1 ஓவர்களும் மூன்றாவது நாளில் வெறும் 2.5 ஓவர்களுமே வீசப்பட்டிருந்தன.

இந்நிலையில், தமது முதலாவது இனிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 233 ஓட்டங்களைப் பெற்றவாறு தமது இன்றைய நான்காவது நாளை ஆரம்பித்த நியூசிலாந்து, 8 விக்கெட் இழப்புக்கு 427 ஓட்டங்களைப் பெற்றபோது தமது ஆட்டத்தை இடைநிறுத்தியது. துடுப்பாட்டத்தில், ஹென்றி நிக்கொல்ஸ் ஆட்டமிழக்காமல் 145, அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 102, பி.ஜெ வட்லிங் 31, கொலின் டி கிரான்ட்ஹொம் 29, டொம் லேதம் 26, டிம் செளதி 25 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஸ்டூவர்ட் ப்ரோட், ஜேம்ஸ் அன்டர்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து, நேற்றைய நான்காள் நாள் ஆட்ட முடிவில் 132 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. தற்போது களத்தில் டேவிட் மலன் 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதுள்ளார். முன்னதாக, மார்க் ஸ்டோன்மன் 55, ஜோ றூட் 51 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தனர். பந்துவீச்சில், ட்ரெண்ட் போல்ட் 2, நீல் வக்னர் 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .