2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பங்களாதேஷை வென்றது இலங்கை

Editorial   / 2020 மார்ச் 02 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் பெண்களுக்கான ஏழாவது இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், மெல்பேணில் இன்று நடைபெற்ற பங்களாதேஷுடனான தமது இறுதி குழுநிலைப் போட்டியில் ஆறுதல் வெற்றியை இலங்கை பெற்றுக் கொண்டது.

இப்போட்டியுடன் ஓய்வுபெறும் ஷஷிகலா சிரிவர்தன, 118 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 2,029 ஓட்டங்களைப் பெற்றதுடன், 124 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளதுடன், 81 இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் 1,097 ஓட்டங்களைப் பெற்றதுடன் 77 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.  

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்

பங்களாதேஷ்: 91/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: நிகர் சுல்தானா 39 (45) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷஷிகலா சிரிவர்தன 4/16 [4], அஷினி குலசூரிய 2/19 [3], கவிஷா டில்ஹாரி 1/13 [4])

இலங்கை: 92/1 (15.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஹசினி பெரேரா ஆ.இ 39 (53), சாமரி அத்தப்பத்து 30 (22) ஓட்டங்கள்)

போட்டியின் நாயகி: ஷஷிகலா சிரிவர்தன

இந்நிலையில், மெல்பேணில் இன்று நடைபெற்ற அடுத்த குழு ஏயின் மெய்நிகர் காலிறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வென்ற அவுஸ்திரேலியா, இந்தியாவுக்கு அடுத்ததாக குழுவிலிருந்து அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: நியூசிலாந்து

அவுஸ்திரேலியா: 155/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பெத் மூனி 60 (50), எலைஸ் பெரி 21 (15), மெக் லன்னிங் 21 (17), அஷ்லெய் கார்ட்னர் 20 (20), றேச்சல் ஹெய்ன்ஸ் 19 (08) ஓட்டங்கள்)

நியூசிலாந்து: 151/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: கடெ மார்டின் ஆ.இ 37 (18), சோபி டிவைன் 31 (36), மடி கிறீன் 28 (23) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜோர்ஜியா வரெஹம் 3/17 [4], மேகன் ஸ்கட் 3/28 [4])

போட்டியின் நாயகி: ஜோர்ஜியா வரெஹம்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .