2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பந்தை சேதப்படுத்திய விவகாரம்; வலுக்கிறது சர்ச்சை

Editorial   / 2018 மார்ச் 25 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க, அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முன்றாம் நாளான நேற்றைய தினம், தென்னாபிரிக்க அணி தனது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி கொண்டிருந்த சமயத்தில், அஸ்திரேலிய  அணி வீர் கமரன் பேன்க்ரொப்ட் பந்தைத் தேய்க்க, வெளியிலிருந்து கொண்டு வந்த ஒரு பொருளை எடுத்துப் பயன்படுத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

பந்தைத் தேய்க்க, மஞ்சள் நிறத்தில் ஒரு பொருளைப் பயன்படுத்தியதாக தொலைக்காட்சியில் காட்டப்பட்டதை அடுத்து, கடும் சர்ச்சைகள் தோன்றியுள்ளன.

பந்துகள் ரிவர்ஸ் ஸ்விங் ஆக, அதன் ஒரு பக்கத்தைத் தேய்த்து இன்னொரு பக்கத்தை பளபளப்புக் குன்றாமல் பராமரிக்க வேண்டும், இதனை இயற்கையான முறையில் செய்யவேண்டுமே தவிர, மைதானத்துக்கு வெளியிலிருந்து கொண்டு செல்லும் ஏதாவது பொருட்களை பயன்படுத்துவது கிரிக்கெட் விதிமுறைகளுக்கு முரணானது.

நடுவர்கள், பேன்க்ரொப்ட்டுடன் இதுதொடர்பில் கேட்கையில் அவர் உபயோகித்ததாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட மஞ்சள் நிறப் பொருளுக்குப் பதிலாக கறுப்பு நிற துணியைத்தான் காண்பித்தார்.

இந்நிலையில், இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக தென்னாபிரிக்க அணியின் முன்னாள் தலைவர், கிரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

நேரடி வர்ணனையிலிருந்த அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வோர்ணும் உண்மையை அவுஸ்திரேலியா ஒப்புக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதில் பேன்க்ரொப்ட் மாத்திரம் சம்பந்தப்பட்டிருக்கமாட்டார், பயிற்சியாளர் டெரன் லீமன், தலைவர் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோரும் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .