2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பிரெஞ்சு குரான் பிறீ: வென்றார் ஹமில்டன்

Editorial   / 2019 ஜூன் 24 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சு குரான் பிறீயை நேற்றிரவு வென்ற மெர்சிடீஸ் அணியின் பிரித்தானிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டன், இவ்வாண்டுக்கான ஃபோர்மியுலா வண் சம்பியன்ஷிப்புக்கான புள்ளிகள் பட்டியலில் தனது முன்னிலையை நீடித்துக் கொண்டார்.

அந்தவகையில், ஏறத்தாழ இவ்வாண்டுக்கான ஃபோர்மியுலா வண் சம்பியன்ஷிப்புக்கான போட்டியில், தனது சக மெர்சிடீஸ் அணியின் பின்லாந்து ஓட்டுநரான வல்ட்டேரி போத்தாஸை விட தனித்தே காணப்படுவது போல இருக்கும் லூயிஸ் ஹமில்டன், இவ்வாண்டின் எட்டுப் பந்தயங்களில் குறித்த பந்தயத்துடன் ஆறாவது வெற்றியைப் பெற்றுள்ளார்.

இவ்வாண்டுக்கான ஃபோர்மியிலான வண் சம்பியன்ஷிப்புக்கான புள்ளிகள் பட்டியலில் இரண்டாமிடத்திலுள்ள வல்ட்டேரி போத்தாஸை விட 36 புள்ளிகள் அதிகமாகப் பெற்றவாறு லூயிஸ் ஹமில்டன் காணப்படுகின்றார்.

லூயிஸ் ஹமில்டன் 187 புள்ளிகளுடனும், வல்ட்டேரி போத்தாஸ் 151 புள்ளிகளுடனும் முறையே முதலாம், இரண்டாம் இடங்களில் காணப்படுகின்ற நிலையில், ஃபெராரி அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான செபஸ்டியன் வெட்டல் 111புள்ளிகளுடன் நான்காமிடத்திலும், றெட் புல் அணியின் நெதர்லாந்து ஓட்டுநரான மக்ஸ் வெர்ஸ்டப்பன் 100 புள்ளிகளுடன் நான்காமிடத்திலும், ஃபெராரி அணியின் மொனாக்கோ ஓட்டுநரான சார்ள்ஸ் லெக்கலேர்க் 87 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்திலும் காணப்படுகின்றனர்.

இந்நிலையில், மேற்குறித்த பந்தயத்தின் இறுதிச் சுற்றில் சார்ள்ஸ் லெக்கலெர்க்கிடமிருந்து சவாலை எதிர்கொண்ட வல்ட்டேரி போத்தாஸ் அவரைத் தடுத்து இரண்டாமிடம் பெற்ற நிலையில், சார்ள்ஸ் லெக்கலெர்க் மூன்றாமிடத்தைப் பெற்றார். மக்ஸ் வெர்ஸ்டப்பன் நான்காமிடத்தையும், செபஸ்டியன் வெட்டல் ஐந்தாமிடத்தையும் பெற்றனர்.

இதேவேளை, இப்பந்தயத்தின் வேகமான சுற்றுக்கான புள்ளியை செபஸ்டியன் வெட்டல் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .