2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடர்: காலிறுதியில் நடால், பெடரர், ஸ்டீவன்ஸ்

Editorial   / 2019 ஜூன் 03 , பி.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு, நடப்புச் சம்பியனான ரபேல் நடால், உலகின் மூன்றாம் நிலை வீரரான ரொஜர் பெடரர், உலகின் ஏழாம் நிலை வீராங்கனையான ஸ்லோனே ஸ்டீவன்ஸ் ஆகியோர் தகுதிபெற்றுள்ளனர்.

நேற்று இடம்பெற்ற தனது நான்காவது சுற்றுப் போட்டியில், ஆர்ஜென்டீனாவின் ஜுவான் லக்னாசியோ லொன்டெரோவை எதிர்கொண்ட உலகின் இரண்டாம் நிலை வீரரான ஸ்பெய்னின் ரபேல் நடால், 6-2, 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இந்நிலையில், நேற்று இடம்பெற்ற தனது நான்காவது சுற்றுப் போட்டியில் ஆர்ஜென்டீனாவின் லியனார்டோ மேயரை எதிர்கொண்ட சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர், 6-2, 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இதேவேளை, நேற்று இடம்பெற்ற ஐந்து மணித்தியாலங்களும் ஒன்பது நிமிடங்களும் நீடித்த தனது நான்காவது சுற்றுப்ன் போட்டியில் சுவிற்ஸர்லாந்தின் ஸ்டாவ் வவ்றிங்காவை எதிர்கொண்ட உலகின் ஆறாம்நிலை வீரரான கிரேக்கத்தின் ஸ்டெபனோஸ் சிட்டிபாஸ், 5-7 (6-8), 7-5, 4-6, 6-3, 6-8 என்ற செட் கணக்கில் போராடித் தோற்று தொடரிலிருந்து வெளியேறினார்.

இந்நிலையில், நேற்று இடம்பெற்ற தனது நான்காவது சுற்றுப் போட்டியில் ஸ்பெய்னின் கர்பைன் முகுருஸாவை எதிர்கொண்ட உலகின் ஏழாம் நிலை வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் ஸ்லோனி ஸ்டீவன்ஸ், 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .