2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பிறீமியர் லீக்: ‘இறுதிக் கட்டம் வரை போட்டி’

Editorial   / 2019 பெப்ரவரி 07 , மு.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரின் பட்டத்தை வெல்லும் அணியைத் தீர்மானிக்கும் நிலைமை, தொடரின் இறுதி ஓரிரு போட்டிகள் வரை தொடருமென எதிர்பார்ப்பதாக, மன்செஸ்டர் சிற்றியின் முகாமையாளர் பெப் குவார்டியோலா தெரிவித்துள்ளார்.

பிறீமியர் லீக் புள்ளிகள் அட்டவணையின் அடிப்படையில், லிவர்பூல், மன்செஸ்டர் சிற்றி, டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸ், செல்சி ஆகிய அணிகள், முறையே முதல் 4 இடங்களில் காணப்படுகின்றன. இதில், லிவர்பூலுக்கும் சிற்றிக்கும் இடையில் 3 புள்ளிகள் வித்தியாசமும், சிற்றிக்கும் ஹொட்ஸ்பருக்குமிடையில் 2 புள்ளிகள் வித்தியாசமுமே காணப்படுகின்றன. முதலிடத்தில் இருக்கும் லிவர்பூல் அணி, தனது இறுதி 2 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது. சிற்றி அணி, இறுதியாக விளையாடிய போட்டியில் வென்றாலும், அதற்கு முன்னைய போட்டியில் தோற்றிருந்தது. இதனால், லிவர்பூலை முந்தும் வாய்ப்பை, சிற்றி கொண்டுள்ளது.

இந்நிலையிலேயே, இறுதி ஓரிரு போட்டிகள் வரை, யார் வெற்றியாளர் என்பதைத் தீர்மானிக்க முடியாதெனத் தெரிவித்த பெப் குவார்டியோலா, தொடர்ச்சியாகப் போட்டிகளை வெல்ல வேண்டியுள்ளதெனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .