2024 மே 02, வியாழக்கிழமை

மலிங்கவின் விளையாடும் காலம் முடிகின்றதா?

Editorial   / 2018 மே 02 , பி.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணிக்கு மீள அழைக்கப்பட வேண்டுமாயின் உள்ளூர்ப் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று கூறப்பட்டதைத் தொடர்ந்து லசித் மலிங்கவின் விளையாடும் காலம் முடிகின்றதா எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

ஏனெனில், இந்தியன் பிறீமியர் லீக்கின் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராகக் காணப்படும் லசித் மலிங்க, இந்தியன் பிறீமியர் லீக் முடியும் வரை உள்ளூர் போட்டிகளில் தான் விளையாட மாட்டேன் என்று கூறியிருந்தார்.

கருத்துத் தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்றதிகாரி அஷ்லி டி சில்வா, லசித் மலிங்க தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அவருக்கு அறிவித்ததாகவும் அவர் மாகாணங்களுக்கிடையேயான தொடரில் விளையாடா விட்டால் அவரைத் தேர்வாளர்கள் கருத்திற் கொள்ள வாய்ப்பில்லை எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில், கருத்துத் தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால, எந்தவொரு உள்ளூர்ப் போட்டிகளிலும் லசித் மலிங்க விளையாடா விட்டால் தேர்வாளர்களே லசித் மலிங்க குறித்த முடிவை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

ஏவ்வாறெனினும் உள்ளூர் இருபதுக்கு – 20 போட்டிகளில் கடந்த சில மாதங்களாக சிறப்பாக செயற்பட்டு எட்டுப் போட்டிகளில் 11.35 என்ற சராசரியில் 17 விக்கெட்டுகளைக் கைப்பற்றியபோதும் இந்தியா, பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடுகள் பங்கேற்ற முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேச போட்டித் தொடரில் லசித் மலிங்க சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கவில்லை.

இறுதியாக, ஏழு மாதங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கெதிரான தொடரிலேயே இலங்கையை லசித் மலிங்க பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .