2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘மீண்டும் டெஸ்ட்களில் விளையாடுவதை கைவிடவில்லை’

Editorial   / 2020 மே 03 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் விளையாடும் நம்பிக்கையைத் தான் கைவிடவில்லை என இங்கிலாந்தின் ஆரம்பத்துடுப்பாட்டவீரர் ஜேஸன் றோய் தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ணம் வென்ற இங்கிலாந்து அணியின் முக்கிய வீரரான ஜேஸன் றோய், கடந்த பருவகாலத்தில் ஐந்து டெஸ்ட்களில் 18.70 என்ற சராசரியைக் கொண்டிருந்த பின்னர் இறுதி ஆஷஸ் டெஸ்டுக்கான அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான தான் கடுமையாகப் பணியாற்றியிருந்ததாகவும், விரைவாக அங்கிருந்து எடுக்கப்பட்டது மிகவும் கவலைக்குரியது என ஜேஸன் றோய் குறிப்பிட்டிருந்ததுடன், தன்னால் இயன்றளவுக்கு கடுமையாகப் பணியாற்றி அணிக்குள் மீள வர முயல்வேன் என்று கூறியிருந்தார்.

கடந்தாண்டு உலகக் கிண்ணத்தில் பின்தொடைத் தசைநார் காயம் காரணமாக நான்கு இனிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடபோதும் 63.28 என்ற சராசரியில் 443 ஓட்டங்களைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக அயர்லாந்துக்கெதிரான டெஸ்டிலும், அவுஸ்திரேலியாவுக்கெதிரான தொடருக்கும் அழைக்கப்பட்டிருந்த ஜேஸன் றோய், ஆரம்பத்தில் ஆரம்பத் துடுப்பாட்டவீரராகவும், பின்னர் நான்காமிடத்திலும் களமிறங்கியிருந்தார்.

பின்னர் தொடர்ந்துவந்த நியூசிலாந்து, தென்னாபிரிக்க சுற்றுப்பயணங்களில் டெஸ்ட் அணிகளில் றோறி பேர்ண்ஸின் ஆரம்பத்துடுப்பாட்ட நீண்ட கால இணைகளாக டொம் சிப்லி, ஸக் க்றோலி ஆகியோர் தம்மை நிலைப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், மத்தியவரிசையிலேயே அணியில் மீள்வருகை அமையலாம் என ஜேஸன் றோய் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .