2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முதலிடத்துக்கு முன்னேறியது பார்சிலோனா

Editorial   / 2018 டிசெம்பர் 03 , பி.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாடக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரின் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு பார்சிலோனா முன்னேறியது.

தாம் வில்லாறியலுடனான போட்டியில் வென்றதைத் தொடர்ந்தும் செவில்லா, அலாவேஸ் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிந்ததைத் தொடர்ந்தே புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு பார்சிலோனா முன்னேறியுள்ளது.

தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற வில்லாறியலுடனான போட்டியின் 36ஆவது நிமிடத்தில், சக முன்கள வீரர் உஸ்மான் டெம்பிலியிடமிருந்து வந்த பந்தை பின்கள வீரர் ஜெராட் பிகே தலையால் முட்டிப் பெற்ற கோலின் மூலம் முன்னிலை பெற்ற பார்சிலோனா, போட்டி முடிவடைய மூன்று நிமிடங்களிருக்கையில் லியனல் மெஸ்ஸி வழங்கிய பந்தை கார்லஸ் அலெனா கோலாக்கியதோடு இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இந்நிலையில், நேற்றும் இலங்கை நேரப்படி இன்று அதிகாலையும் இடம்பெற்ற பிரதான அணிகளின் போட்டி முடிவுகள் பின்வருமாறு,

ஜிரோனாவின் மைதானத்தில்,

அத்லெட்டிகோ மட்ரிட்  1 – 1 ஜிரோனா

முதற்பாதி முடிவில் 0-1

ஜொனாஸ் றமல்ஹோ (ஓவ்ண் கோல்) 82  கிறிஸ்டியன் ஸ்டுவானி  45+2 பெனால்டி

அலாவேஸின் மைதானத்தில்,

அலாவேஸ் 1 – 1 செவில்லா

முதற்பாதி முடிவில் 1-0

ஜொனி றொட்றிகாஸ் 37   விஸாம் பென் யெடர் 78

அந்தவகையில், கடந்த வார போட்டிகளின் முடிவில் புள்ளிகள் பட்டியல் பின்வருமாறு,

  1. பார்சிலோனா 28 புள்ளிகள்
  2. செவில்லா 27 புள்ளிகள்
  3. அத்லெட்டிகோ மட்ரிட் 25 புள்ளிகள்
  4. அலாவேஸ் 24 புள்ளிகள்
  5. றியல் மட்ரிட் 23 புள்ளிகள்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .