2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யுனைட்டெட்டை வென்றது டொட்டென்ஹாம்

Editorial   / 2018 பெப்ரவரி 01 , பி.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று  இடம்பெற்ற போட்டிகளில், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், போர்ண்மெத், மன்செஸ்டர் சிற்றி, எவெர்ற்றன் ஆகிய அணிகள் வென்றன.

டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், 2-0 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட்டை வென்றது. டொட்டென்ஹாம் சார்பாக கிறிஸ்டியன் எரிக்ஸன் ஒரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது. இதில், கிறிஸ்டியன் எரிக்ஸன் போட்டி ஆரம்பித்து வெறும் 11 செக்கன்களில் கோலைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பிறீமியர் லீக்கின் நடப்புச் சம்பியன்களான செல்சி, 0-3 என்ற கோல் கணக்கில் போர்ண்மெத்தால் தோற்கடிக்கக்கப்பட்டது. போர்ண்மெத் சார்பாக, கலும் வில்ஸன், ஜூனியர் ஸ்டனிஸ்லஸ், நாதன் அகே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர்.

இந்நிலையில், மன்செஸ்டர் சிற்றி, 3-0 என்ற கோல் கணக்கில் வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியனை வென்றது. மன்செஸ்டர் சிற்றி சார்பாக, பெர்ணான்டின்ஹோ, கெவின் டி ப்ரூனே, சேர்ஜியோ அகுரோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

எவெர்ற்றன், 2-1 என்ற கோல் கணக்கில் லெய்செஸ்டர் சிற்றியை வென்றது. எவெர்ற்றன் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் தியோ வொல்கொட் பெற்றதோடு, லெய்செஸ்டர் சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜேமி வார்டி பெற்றார்.

மேற்படி போட்டிகளின் முடிவில், பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் அணிகளின் தரவரிசை பின்வருமாறு

  1. மன்செஸ்டர் சிற்றி  25 போட்டிகள் 68 புள்ளிகள்
  2. மன்செஸ்டர் யுனைட்டெட் 25 போட்டிகள் 53 புள்ளிகள்
  3. லிவர்பூல் 25 போட்டிகள் 50 புள்ளிகள்
  4. செல்சி 25 போட்டிகள் 50 புள்ளிகள்
  5. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் 25 போட்டிகள் 48 புள்ளிகள்
  6. ஆர்சனல் 25 போட்டிகள் 42 புள்ளிகள்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .