2024 மே 14, செவ்வாய்க்கிழமை

ரஷ்ய குரான் பிறீ: வென்றார் ஹமில்டன்

Editorial   / 2019 செப்டெம்பர் 30 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்ய குரான் பிறீயில் ஏற்பட்ட விபத்துக்கள் மெர்சிடீஸ் அணியின் பிரித்தானிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டனின் முதலாமிடத்தை உறுதி செய்ய, இவ்வாண்டுக்கான ஃபோர்மியுலா வண் சம்பியன்ஷிப் பட்டத்தை மேலும் நெருங்கியுள்ளார்.

நேற்று நடைபெற்ற இப்பந்தயத்தை முதலாமிடத்திலிருந்து ஆரம்பித்திருந்த ஃபெராரி அணியின் மொனாக்கோ ஓட்டுநரான சார்ள்ஸ் லெக்கலெர்க், லூயிஸ் ஹமில்டனின் அச்சுறுத்தலிருந்து தாம் முதலாம், இரண்டாம் இடங்களைப் பெறும் பொருட்டான ஃபெராரி அணியின் கட்டளையின்படி மூன்றாமிடத்திலிருந்து பந்தயத்தை ஆரம்பித்த சக ஃபெராரி அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான செபஸ்டியன் வெட்டலை முதலாமிடம் நோக்கிச் செல்ல அனுமதித்திருந்தார்.

இந்நிலையில், முதலாமிடத்தைப் பெற்ற பின்னர் செபஸ்டியல் வெட்டல் ஃபெராரி அணியின் கட்டளைகளை மீறி மீண்டும் சார்ள்ஸ் லெக்கலெர்க்குக்கு முதலாமிடத்தை மீள வழங்க மறுத்திருந்தார். அந்தவகையில், சார்ள் லெக்கலெர்க்கின் டயர்களை முன்னரே மாற்றி அவரை பந்தயத்தின் பின்பாதியில் முன்னிலைக்கு கொண்டு வரும் நிலையில் ஃபெராரி அணி ஈடுபட்டது.

எவ்வாறெனினும், டயர்களை மாற்றி நான்காமிடத்தில் சார்ள்ஸ் லெக்கலெர்க் பந்தயத்தில் மீண்டும் இணைந்திருந்த நிலையில், டயர்களை மாற்றி வந்து அதீத வேகம் காரணமாக மீண்டும் முதலாமிடத்திலேயே பந்தயத்தில் இணைந்திருந்த செபஸ்டியன் வெட்டல் இயந்திரக் கோளாறு காரணமாக பந்தயத்தின் இடைநடுவிலேயே விலக வேண்டி ஏற்பட்டது.

இந்நிலையில், பந்தயத்தில் முன்னிலை பெற்ற லூயிஸ் ஹமில்டன், செபஸ்டியன் வெட்டலின் கார் அகற்றப்படும் இடைவேளையில் தனது டயர்களை மாற்றி முன்னிலையில் தொடர்ந்ததோடு, மீண்டும் ஒரு விபத்து இடம்பெற்றபோது லூயிஸ் ஹமில்டனின் சக மெர்சிடீஸ் அணியின் பின்லாந்து ஓட்டுநரான வல்ட்டேரி போத்தாஸிடம் இரண்டாமிடத்தையும் ஃபெராரி அணி இழந்த நிலையில், முதலாமிடத்தை லூயிஸ் ஹமில்டனும், இரண்டாமிடத்தை வல்ட்டேரி போத்தாஸும், மூன்றாமிடத்தை சார்ள்ஸ் லெக்கலெர்க்கும் பெற்றுக் கொண்டனர்.

நான்காம், ஐந்தாம் இடங்களை றெட் புல் அணியின் நெதர்லாந்து ஓட்டுநரான மக்ஸ் வெர்ஸ்டப்பன், தாய்லாந்து ஓட்டுநரான அலெக்ஸான்டர் அல்போன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

அந்தவகையில், இப்பந்தயத்தின் வேகமான சுற்றுக்கான புள்ளியையும் பெற்ற லூயிஸ் ஹமில்டன், ஃபோர்மியுலா வண் சம்பியன்ஷிப்புக்கான புல்ளிகள் பட்டியலில் இரண்டாமிடத்திலுள்ள வல்ட்டேரி போத்தாஸுக்கும், தனக்குமிடையிலான புள்ளிகள் வித்தியாசத்தை 73 புள்ளிகளாக அதிகரித்துக் கொண்டார்.

முதலாமிடத்தில் 322 புள்ளிகளுடன் லூயிஸ் ஹமில்டனும், இரண்டாமிடத்தில் 249 புள்ளிகளுடன் வல்ட்டேரி போத்தாஸும், மூன்றாமிடத்தில் 215 புள்ளிகளுடன் சார்ள்ஸ் லெக்கலெர்க்கும் காணப்படுகின்றனர். நான்காமிடத்தில் 212 புள்ளிகளுடன் மக்ஸ் வெர்ஸ்டப்பனும், ஐந்தாமிடத்தில் 194 புள்ளிகளுடன் செபஸ்டியன் வெட்டலும் காணப்படுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .