2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

லா லிகா: வென்றது றியல்

Editorial   / 2017 நவம்பர் 06 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில் இடம்பெற்ற லாஸ் பல்மாஸுடனான போட்டியில் றியல் மட்ரிட் வெற்றிபெற்றது.

இப்போட்டியின் 41ஆவது நிமிடத்தில் கஸேமீரோ பெற்ற கோலின் மூலம் முன்னிலை பெற்ற றியல் மட்ரிட், போட்டியின் 56ஆவது நிமிடத்தில், போட்டியின் 30 அடி தூரத்திலிருந்து மார்கோ அஸென்ஸியோ பெற்ற அபாரமான கோலின் மூலம் தமது முன்னிலையை இரட்டிப்பாக்கிக் கொண்டதுடன், கிறிஸ்டியானோ ரொனால்டோ வழங்கிய பந்தை, போட்டியின் 74ஆவது நிமிடத்தில் இஸ்கோ கோலாக்கியதோடு, 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

இப்போட்டி முடிவில் 23 புள்ளிகளுடன் காணப்படும் றியல் மட்ரிட், லா லிகா புள்ளிகள் தரவரிசையில் மூன்றாமிடத்தில் காணப்படுகிறது. 31 புள்ளிகளுடன் முதலிடத்தில் பார்சிலோனாவும் 27 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் வலென்சியாவும் காணப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .