2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வெளியேற்றப்பட்டது டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்

Editorial   / 2020 மார்ச் 11 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து, கடந்த பருவகாலத்தில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் வெளியேற்றப்பட்டது.

தமது மைதானத்தில் நடைபெற்ற ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான ஆர்.பி லெய்ப்ஸிக்குடனான இறுதி 16 அணிகளுக்கிடையிலான முதலாவது சுற்றுப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் பின்தங்கியிருந்த இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், அவ்வணியின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் அவ்வணியின் அணித்தலைவரும் மத்தியகளவீரருமான மார்செல் சபிட்ஸர் போட்டியின் 10ஆவது நிமிடத்தில் பெற்ற கோல் காரணமாக ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.

பின்னர் அடுத்த 11ஆவது நிமிடத்தில் மார்செல் சபிட்ஸர் பெற்ற மேலுமொரு கோல் மூலம் தமது முன்னிலையை இரட்டிப்பாக்கிய ஆர்.பி லெய்ப்ஸிக், போட்டியின் 87ஆவது நிமிடத்தில் மாற்றுவீரராகக் களமிறங்கிய தமது மத்தியகளவீரர் எமில் பொர்ஸ்பேர்க் பெற்ற கோலோடு 4-0 என்ற மொத்த கோல் கணக்கில் முதன்முறையாக சம்பியன்ஸ் லீக் காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

இதேவேளை, இத்தாலிய சீரி ஏ கழகமான அத்லாண்டாவின் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது சுற்றுப் போட்டியில் 1-4 என்ற கோல் கணக்கில் பின்தங்கியிருந்த ஸ்பானிய லா லிகா கழகமான வலென்சியா, தமது மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் 3-4 என்ற கோல் கணக்கில் பின்னடைவைச் சந்தித்து 4-8 என்ற மொத்த கோல் எண்ணிக்கையில் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டது.

அத்லாண்டா சார்பாகப் பெறப்பட்ட நான்கு கோல்களையும் ஜோசிப் இலிசிச் பெற்றிருந்ததோடு, வலென்சியா சார்பாக கெவின் கமெய்ரோ இரண்டு கோல்களையும் பெரன் டொரஸ் ஒரு கோலையும் பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X