2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

’விசாரணைகளுக்கு ஆதரவு’

Nirshan Ramanujam   / 2017 செப்டெம்பர் 26 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் பேரவையின், மோசடிக்கு எதிரான பிரிவினர் இலங்கையில் முன்னெடுத்துவரும் விசாரணைகளுக்கு, தடையின்றிய ஆதரவை வழங்கிவருவதாக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் தொடர்பில், ஐ.சி.சி.இன் மோசடிக்கு எதிரான பிரிவினரின் விசாரணைகள் குறித்து தமிழ் மிரருக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

விசாரணைக்குழுவினர் தங்குதடையின்றி தமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். அவர்களுக்கு உரிய ஏற்பாடுகளை நாம் செய்து வருகிறோம். 2012 ஆம் ஆண்டுமுதல் இலங்கை வீரர்கள் பங்கேற்ற போட்டிகள் குறித்து அவர்கள் விரிவாக ஆராய்ந்து வருவதாக அறிகிறேன்.

கேள்வி: எவ்வாறான விசாரணைகள் இடம்பெறுகின்றன?

பதில்: தற்போதைய சூழ்நிலையில், அதற்குரிய பதிலை என்னால் வழங்க முடியாது. ஆயினும் நாம் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறோம். அனைத்து வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு பணிப்புரை விடுத்துள்ளோம்.

கேள்வி: அவர்கள் எவ்வகையான விசாரணைகளை நடத்தப்போகிறார்கள் என்பதை முன்கூட்டியே அறிவித்துள்ளார்களா?

பதில்: சில விடயங்கள் குறித்து தெரிவித்தார்கள். 1992 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற போட்டிகள் குறித்தும் அவர்கள் தகவல் சேகரித்துள்ளதாக அறிகிறேன்.

கேள்வி: இன்னும் எத்தனை நாட்கள் அவர்களின் விசாரணை தொடரும்?

பதில்: இன்னும் சில நாட்கள் தங்கியிருப்பார்கள். அதன்பின்னர் அது குறித்து முழுமையான விபரங்களைத் தர முடியும்.

கேள்வி: இவ்வகையான விசாரணைகளால் இலங்கை கிரிக்கெட் அணிக்கு அபகீர்த்தி ஏற்படுவதாக எண்ணவில்லையா?

பதில்: ஏதாவது ஒரு சந்தேகம் எழுமிடத்து, விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது அவசியம். அது வீரர்களின் உண்மைத்தன்மை குறித்ததான தீர்மானத்துக்கு உதவியாக இருக்கும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .