2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது கொல்கத்தா டெஸ்ட்

Editorial   / 2017 நவம்பர் 20 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், கொல்கத்தாவில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வின்றி முடிவடைந்தது.

கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்தியா, தமது முதலாவது இனிங்ஸில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், செட்டேஸ்வர் புஜாரா 52, ரித்திமான் சஹா 29, மொஹமட் ஷமி 24 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், சுரங்க லக்மால் 4, டில்ருவான் பெரேரா, தசுன் ஷானக, லஹிரு கமகே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 294 ஓட்டங்களைப் பெற்று, இந்திய அணியின் முதலாவது இனிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை விட 122 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. துடுப்பாட்டத்தில், ரங்கன ஹேரத் 67, அஞ்சலோ மத்தியூஸ் 52, லஹிரு திரிமான்ன 51, நிரோஷன் டிக்வெல்ல 35, அணித்தலைவர் தினேஷ் சந்திமால் 28 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், புவ்னேஷ்வர் குமார், மொஹமட் ஷமி ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, இன்றைய ஐந்தாம் நாளின் மதிய இடைவேளையின் பின்னர் 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 352 ஓட்டங்களைப் பெற்று, 231 ஓட்டங்களை இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக நிர்ணயித்தது. துடுப்பாட்டத்தில், அணித்தலைவர் விராத் கோலி ஆட்டமிழக்காமல் 104, ஷீகர் தவான் 94, லோகேஷ் ராகுல் 79 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், சுரங்க லக்மால், தசுன் ஷானக ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் லஹிரு கமகே, டில்ருவான் பெரேரா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இதனையடுத்து, 231 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கையணி, 7 விக்கெட்டுகளை இழந்து 75 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் இடைநிறுத்தப்பட்ட போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. துடுப்பாட்டத்தில், நிரோஷன் டிக்வெல்ல 27, அணித்தலைவர் தினேஷ் சந்திமால் 20 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், புவ்னேஷ்வர் குமார் 4, மொஹமட் ஷமி 2, உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக புவ்னேஷ்வர் குமார் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .