2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வெற்றிப் பாதைக்குத் திரும்பின பார்சிலோனா, அத்லெட்டிகோ

Editorial   / 2019 பெப்ரவரி 17 , பி.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களான பார்சிலோனா, அத்லெட்டிகோ மட்ரிட் ஆகியவை வெற்றிப் பாதைக்குத் திரும்பின.

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற றியல் வல்லடொலிட்டுடனான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே வெற்றிப்பாதைக்கு பார்சிலோனா திரும்பியுள்ளது.

தொடர்ச்சியாக கடந்த மூன்று போட்டிகளிலும் சமநிலை முடிவுகளைப் பெற்றிருந்த பார்சிலோனா, குறித்த போட்டியின் முதற்பாதி முடிவில், தமது பின்கள வீரர் ஜெராட் பிகேயை, விதிமுறைகளை மீறி றியல் வல்லடொலிட்டின் மத்தியகள வீரர் மிச்செல் போட்டியின் முதற்பாதி முடிவில் கையாள வழங்கப்பட்ட பெனால்டியை, தமது நட்சத்திர முன்கள வீரர் லியனல் மெஸ்ஸி கோலாக்க முன்னிலை பெற்றது.

பின்னர், இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில் பார்சிலோனாவின் முன்னிலையை மெஸ்ஸி இரட்டிப்பாக்குகிறார் எனக் கருதப்பட்டபோது, கோல் கம்பத்துக்கு அருகிலிருந்து வந்த உதையை றியல் வல்லடொலிட்டின் கோல் காப்பாளராகிய ஜோர்டி மஸிப் அபாரமாகத் தடுத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து போட்டியின் இறுதிக் கட்டங்களில், மாற்று வீரராகக் களமிறங்கிய பார்சிலோனாவின் பிலிப் கோச்சினியோவை, றியல் வல்லடொலிட்டின் பின்கள வீரர் கிகோ வீழ்த்த பெனால்டி வழங்கப்பட்டது. இந்நிலையில், மெஸ்ஸியின் அந்தப் பெனால்டியை ஜோர்டி மஸிப் தடுத்திருந்த நிலையில், இறுதியாக 1-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வென்றது.

இந்நிலையில், றயோ வலெக்கனோ அணியின் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற அவ்வணியுடனான லா லிகா போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் தமது தொடர்ச்சியான இரண்டு தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அத்லெட்டிகோ மட்ரிட்டும் வெற்றிப்பாதைக்குத் திரும்பியுள்ளது.

இப்போட்டியின் 74ஆவது நிமிடத்தில் சக முன்கள வீரர் அல்வரோ மொராட்டா வழங்கிய பந்தை இன்னொரு முன்கள வீரரான அன்டோனி கிறீஸ்மன் கோலாக்கியதோடு 1-0 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிகோ மட்ரிட் வென்றிருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .