2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஸ்மித்தில்லாத அவுஸ்திரேலியாவை வீழ்த்துமா ஆர்ச்சரின் இங்கிலாந்து?

Editorial   / 2019 ஓகஸ்ட் 22 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் மூன்றாவது போட்டி லீட்ஸில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகின்றது.

இத்தொடரின் சிறந்த துடுப்பாட்டவீரரான அவுஸ்திரேலியாவின் முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் இப்போட்டியில் பங்குபற்ற மாட்டார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தொடரைச் சமப்படுத்துவதற்கான அரிய வாய்ப்பாக இங்கிலாந்துக்கு இப்போட்டி காணப்படுகின்றது.

அந்தவகையில், மீண்டுமொரு முறை இங்கிலாந்தின் பிரதான ஆயுதமாக ஜொவ்ரா ஆர்ச்சரே காணப்படப் போகின்றார். கடந்த போட்டியில் அவர் தன்மீதான எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் விதமாக விளையாடியிருந்த நிலையில், இனி அவர் தனது ஒவ்வொரு போட்டியிலும் தன்மீதான அதிகரித்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தாக வேண்டிய நிலையிலுள்ளார்.

இப்போட்டிக்கான இங்கிலாந்துக் குழாமிலும் ஜேம்ஸ் அன்டர்சன் இடம்பெறாத நிலையில், கிறிஸ் வோக்ஸை சாம் கர்ரனால் பிரதியிடப்படும் வாய்ப்பிருந்தாலும் கடந்த போட்டியில் விளையாடிய அதேயணியே இப்போட்டியிலும் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகையில் ஜேஸன் றோய், ஜோ டென்லி ஆகியோர் சிறப்பாகச் செயற்பட வேண்டிய அழுத்தத்தில் காணப்படுகின்றனர்.

மறுபக்கமாக ஸ்டீவ் ஸ்மித்தை மர்னுஸ் லபுஷைன் பிரதியிடக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்ற நிலையில், அவுஸ்திரேலியக் குழாமில் வெளியே மார்க்கஸ் ஹரிஸ் காணப்படுகின்ற நிலையில், டேவிட் வோணர், கமரொன் பான்குரொஃப்ட் ஆகியோர் ஓட்டங்களைப் பெற வேண்டிய அழுத்தத்தில் காணப்படுகின்றனர். பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ஜொஷ் ஹேசில்வூட்டை ஜேம்ஸ் பற்றின்ஸன் பிரதியிடக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .