2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஹலெப்பை வென்று சம்பியனானார் மேர்ட்டன்ஸ்

Editorial   / 2019 பெப்ரவரி 17 , பி.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டார் பகிரங்க டென்னிஸ் தொடரில் பெல்ஜியத்தின் எலிஸே மேர்ட்டன்ஸ் சம்பியனானார்.

நேற்று இடம்பெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில், உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான சிமோனா ஹலெப்பை வென்றே எலிஸே மேர்ட்டன்ஸ் சம்பியனாகியிருந்தார்.

தத்தமது அரையிறுதிப் போட்டிகளில், முறையே உலகின் எட்டாம் நிலை வீராங்கனையான நெதர்லாந்தின் கிகி பேர்ட்டன்ஸ், உலகின் ஏழாம் நிலை வீராங்கனையான உக்ரேனின் எலினா ஸ்விட்டோலினாவை வென்று, இறுதிப் போட்டிக்கு 23 வயதான எலிஸே மேர்ட்டன்ஸும் 27 வயதான சிமோனா ஹலெப்பும் தகுதிபெற்றிருந்தனர்.

இந்நிலையில், இறுதிப் போட்டியின் முதலாவது செட்டை 6-3 என றோமானியாவின் சிமோனா ஹலெப் கைப்பற்றினார். எனினும் சுதாகரித்துக் கொண்ட உலகின் 21ஆம் நிலை வீராங்கனையான எலிஸே மேர்ட்டன்ஸ், 6-4, 6-3 என்ற செட்களில் அடுத்த இரண்டு செட்களையும் வென்று சம்பியனானார்.

சம்பியனான எலிஸே மேர்ட்டன்ஸ், இறுதிப் போட்டி, அரையிறுதிப் போட்டி தவிர, காலிறுதிப் போட்டியிலும் உலகின் முதல்நிலை 10 வீராஙகனைகளிலொருவரான, ஆறாமிடத்திலுள்ள ஜேர்மனியின் அங்கெலிக் கேர்பரை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .