2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

56 சிறுவர்களுக்கு டெங்குக் காய்ச்சல்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஜனவரி 03 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில், கடந்த டிசெம்பர் மாதம் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 56 சிறுவர்களில், இருவர் உயிரிழந்துள்ளரென, அவ்வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜாபீர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“கடந்த டிசெம்பர் மாதம் 01ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரை டெங்குத் தொற்றுக்குள்ளான 117 பேர், காத்தான்குடி ஆதார வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றிருந்தார்கள். இவர்களில் 56 பேர், சிறுவர்களும் குழந்தைகளுமாவர்.

“இவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் முழுநேரக் கண்காணிப்பில் இருந்து சிகிச்சை பெற்று சுகதேகிகளாக வெளியேறியுள்ளார்கள்.

“இதேவேளை, 6 மற்றும் 7 வயதுடைய சிறுமிகள் இருவர், டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த வாரம் உயிரிழந்தனர்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .