2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அட்டப்பளம் பொதுமயானப் பிரச்சினைக்கு அளுநரின் நேரடி தலையீட்டு அவசியம்

Editorial   / 2018 மார்ச் 08 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ், வா.கிருஸ்ணா

அம்பாறை மாவட்டத்தின் அட்டப்பளம் பொதுமயானப் பிரச்சினைக்கு, கிழக்கு மாகாண ஆளுநர் நேரடியாகத் தலையிட்டு, அந்த மக்களுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டுமென, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.

அட்டப்பளம் பொது மயானப் பிரச்சினை தொடர்பாக, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகல்லாகமவுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்திலேயே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நிந்தவூர் பிரதேசத்தில் அட்டப்பள்ளம் மக்களால் பரம்பரை பரம்பரையாக பயன்படுத்தப்பட்டு வந்த பொது மயானம், யுத்த காலம் தொடக்கம் சிறிது, சிறிதாக ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி முற்று முழுதாக குறித்தநபர் ஒருவரால் அளந்து எல்லையிட முற்பட்ட வேளையில், மக்களுக்கும் குறித்த நபர், அரச அதிகாரிகளுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

பொலிஸாரின் தலையீட்டை அடுத்து, அட்டப்பள்ளத்தைச் சேர்ந்த 23 பேர் கைது செய்யப்பட்டதாக, எம்மிடம் அட்டப்பள்ள மக்களால் குறிப்பிடப்பட்டிருந்தது.

இச்சம்பவம் கிழக்கு மாகாணத்தில் மிகவும் கரிசிணையுடன் சேவையாற்றும் தாங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள் என நினைக்கின்றேன்.

குறித்த பொதுமயானம் மீதான அத்து மீறல் சம்பவமானது, கிழக்கு மாகாணத்தின் ஓர் இனத்தை இன்னுமொரு இனம் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலைமையை உருவாக்கி, இன முரண்பாட்டைத் தோற்றுவித்துவிடுமோ என்ற அச்சம் தோன்றுகின்றது.

எனவே, கிழக்கு மாகாணத்தின் இன உறவு மேம்பட வேண்டும் என்ற உயரிய நோக்குடன் செயற்படும் தாங்கள், குறித்த விடயத்தில் நேரடியாகத் தலையிட்டு, அட்டப்பள்ள மக்கள் கால காலமாகப் பயன்படுத்திவந்த பொது மயானத்தை அவர்களுக்குப் பெற்றுக்கொடுத்து, சுமுகமான தீர்வு ஏற்படுவதற்கு ஆவண செய்யவும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .