2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அனைத்து தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேரம்பேசும் சக்தியாக உருவாகவேண்டும்

Editorial   / 2019 ஜூலை 17 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 க.விஜயரெத்தினம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அனைத்து தமிழ்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பேரம்பேசும் சக்தியாக உருவாக்கினால்தான் வடகிழக்கு,மலையமக்களின் அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க முடியுமென  தெரிவித்த ஈரோஸ் கட்சியின் தலைவர் இரா.பிரபாகரன், தமிழ்மக்களுக்கு  தீர்வு பெற்றுத்தருவோம் என்று தமிழ்தேசிய கூட்டமைப்போ அல்லது தமிழ்கட்சிகளோ தீர்வை பெற்றுக் கொடுக்கமுடியாதென்றும் கூறினார்.   

"தமிழ்மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு அனைத்துக் கட்சிகளும் மாற்றத்துக்காக ஒன்றிணைவோம்" எனும் தொனிப்பொருளில் ஈரோஸ் கட்சியின் தலைவரினால் ஊடக சந்திப்பொன்று மட்டக்களப்பு வோய்ஸ் ஓவ் மீடியா நிலையத்தில் நேற்றுப்புதன்கிழமை நடைபெற்றது.இவ் ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ...  மூன்று தசாப்தகாலமாக தமிழ்மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு இனிவரும் காலங்களிலோ அல்லது வருவிருக்கின்ற தீபாவளியிலோ தீர்வுப்பொதியை தமிழ்மக்களின் கைகளில் கொடுக்க இயலாதகாரியமாகும்.

வடக்கு,கிழக்கு,மலையகத்தில் உள்ள அனைத்து தமிழ்கட்சிகளும் தமிழ்மக்களுக்காக சிந்தித்து செயற்பட வேண்டும்.எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தனிப்பட்ட நோக்கத்திற்காக தமிழ் கட்சிகள் ஒன்றிணையாமல் தமிழ்மக்களின் இருப்பையும் மற்றும் அபிவிருத்தி,வாழ்வாதாரம், தொழில்வாய்ப்புக்காக சிந்தித்துத்து அவர்களின் தேவையறிந்தும் பசியைப்போக்குவதற்கும் ஒன்றிணையுமாறு நான் வினையமாக கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிடவுள்ள ஜனாதிபதியிடம் தமிழ்மக்களின் தேவைகளை நிறைவேற்றித்தருகின்றவரிடம் பேரம்பேசிக்கொண்டு தமிழ் மக்களையும் சுதந்திரமாக வாழ்வதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டிய தேவையுள்ளது.

இதன்போது வடகிழக்கு இணைந்த அதிகாரம்,சிறைக்கைதிகளின் விடுதலை, தோட்டத்தொழிலாளர்களின்  1000 ரூபாய் சம்பள உயர்வு,தமிழ்மக்களின் அடிப்படைப் பிரச்சனைக்கு தீரேவு உள்ளிட்ட 100மேற்பட்ட கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளரிடம் பேரம்பேசுவதற்கு ஒன்றிணையுமாறு நான் கேட்கின்றேன்.

நாங்கள் நாடாளுமன்ற கதிரைக்கோ அல்லது முதலமைச்சர் கதிரைக்கோ நான் ஆசைப்படவில்லை.தமிழ்மக்களிடம் வாக்கை எடுத்துக்கொண்டு மக்களுக்கு துரோகம், சதித்திட்டம் செய்து பேரினவாத சதிவலைக்குள் சிக்குண்டு தமிழ்மக்களை நடுத்தெருவில் விட்ட தமிழ்கட்சிகளை தமிழ்மக்கள் சிந்தித்து தற்போது நிராகரித்து வருகின்றார்கள். தமிழ்மக்களுக்காகத்தான் கட்சி உருவாக்கப்பட்டுள்ளதெனத் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .