2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அப்துல் றஹுமான் காலமானார்

Editorial   / 2019 மே 05 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

 

ஏறாவூரின் மூத்த முன்னோடி அரசியல்வாதியும் கல்வியியலாளருமான தேசமான்ய எம்.ஏ.சி. அப்துல் றஹுமான், தனது 88ஆவது வயதில் காலமானார்.

அன்னாரது ஜனாஸா நல்லடக்கம், சனிக்கிழமையன்று (04) இடம்பெற்றது.

இவர், மட்டக்களப்பு மாவட்டத்தின் சமூக சேவைத் தொண்டனாகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, தமிழ், முஸ்லிம், சிங்கள இன ஐக்கியத்துக்காகப் பாடுபட்டவராவார்.

கல்வித்துறை வளரச்சியில் ஆர்வம் காட்டிய இவர் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஆளுநர்சபை உறுப்பினராகப் பணியாற்றியதோடு, இலங்கையின் முதற் பெண் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவினால், உள்ளுராட்சி விஷேட ஆணையாளராகவும் நியமிக்கப்பட்டு சேவை புரிந்தார்.

பன்முக ஆற்றல்கொண்ட இவர், வாழைச்சேனை காகித ஆலையின் பணிப்பாளனராகவும் தேசிய கடதாசிக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்பாட்டுப் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

கல்வியியலாளரான இவர், மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பாடசாலைகளினது உருவாக்கத்துக்கும் காரணகர்த்தாவாக இருந்துள்ளார்.

அந்திம காலத்தில் கொழும்பில் வாழ்ந்து மறைந்த இவரின் ஜனாஸா நல்லடக்கம் கொழும்பு, ஜாவத்தை பள்ளி மையவாடியில் நடைபெற்றதோடு அவரது சொந்த ஊரான ஏறாவூரிலும் சனிக்கிழமையன்று ஜனாஸாத் தொழுகையும் மன்றாட்டமும் இடம்பெற்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .