2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அமெரிக்கத் தூதுவரின் மட்டக்களப்பு விஜயம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2019 ஏப்ரல் 18 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை, மாலைதீவு நாடுகளுக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ், மாவட்டத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள், இனங்களுக்கிடையிலான நல்லுறவு, நல்லிணக்கம், மட்டக்களப்பு மக்கள் எதிர்கொள்ளும் சமகால சவால்கள் குறித்து அவதானம் செலுத்தினார்.

அமெரிக்கத் தூதுவருக்கும் சமூக வலுவூட்டல் ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று, மட்டக்களப்பு – ஈஸ்ட் லகூன் ஹோட்டலில், நேற்று (17) மாலை இடம்பெற்றது.

இதன்போது, மேற்படி விடயங்கள் தொடர்பில் இராஜாங்க அமைச்சருடன் தூதுவர் கலந்துரையாடினார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள காணிப் பிரச்சினைகள், ஏனைய சவால்கள் தொடர்பில், அமெரிக்கத் தூதுவருக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளதாக, இராஜாங்க அமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .