2024 மே 14, செவ்வாய்க்கிழமை

‘அமைதியையும் சமாதானத்தையும் நிலைநாட்டுவதில் பொலிஸாரின் பங்கு அளப்பரியது’

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2017 ஓகஸ்ட் 19 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

“மக்களிடையே அமைதியையும் சமாதானத்தையும் நிலைநாட்டுவதில் பொலிஸாரின் பங்கு அளப்பரியது. பொலிஸாரின் அர்ப்பணிப்புடனான செயற்பாடுகளைப் பாராட்டியே ஆகவேண்டும். அந்த வகையில், இடமாற்றம் பெற்றுச்செல்லும் பொலிஸ் அதிகாரி ஆரியபந்து வெதகெதர பாராட்டப்பட வேண்டியவர்” என, மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறூப்பதிகாரியாய் கடந்த மூன்று வருடங்களாகப் பணிபுரிந்து பிபிலை பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் ஆரியபந்து வெதகெதரவுக்கு இலங்கை ஹிறா பவுண்டேசனால் ஏற்பாடு செய்த கௌரவிப்பு விழா, காத்தான்குடி அல்மனார் மண்டபத்தில் முன்னாள் காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் நேற்றிரவு நடைபெற்றபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து பேசிய அமைச்சர், “பொறுப்திகாரி வெதகெதர, தமிழில் நன்கு உரையாடக்கூடியவர். அவர் இப்பிரதேசத்திலுள்ள தமிழ் பேசும் மக்களுடன் தமிழில் பேசுவதால் சிறப்பான முறையில் சேவையாற்ற முடிந்தது. தற்போது புதிதாகக் கடமையேற்றிருக்கும் புதிய பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சியும் தமிழைகைக் கற்று தமிழில் பணியாற்ற வாழ்த்துகின்றேன்” என்றார்.

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ்மா அதிபர் ஜாக்கொட ஆராச்சி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவர உட்பட உயர் பொலிஸ் அதிகாரிகள், ஊர் முக்கியஸ்தர்கள் என் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

பொறுப்பதிகாரி ஆரியபந்து வெதகெதர, பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .