2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘அரச மானிய உரங்களைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தல் தண்டனைக்குரியது’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 ஒக்டோபர் 01 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

விவசாயிகளுக்கு உதவும் வகையிலும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் அரசாங்கத்தால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் அரச மானிய உரங்களை பெற்றுக்கொள்ளும் விவசாயிகள், அந்த உரத்தைத் தனியாருக்கு விற்பது அல்லது விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருப்பது என்பவை தண்டனைக்குரிய குற்றமாகுமென, தேசிய உரச் செயலகத்தின் மட்டக்கப்பு மாவட்ட  உதவிப் பணிப்பாளர் கே.எல்.எம். சிறாஜுன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில்  பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளும் வேளையில்,  சுற்றுநிருபத்தை, அரச உத்தியோகத்தர்களுக்கு தெளிவுப்படுத்தும் பயிற்சிப்பட்டறை, மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில், நேற்று (30 நடைபெற்றது.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சிப்பட்டறையில், தொடர்ந்தும் கூறிய அவர், விவசாயத்தில் ஈடுபடுவோர் தாங்கள் முறைப்படியும், சட்டபூர்வமாகவும் விவசாயத்தில் ஈடுபடுகின்றோம் என்பதை சம்பந்தப்பட்ட துறைசார்ந்த கடமை அதிகாரிகள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றார்.

விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், அரசாங்கம் பல்வேறு அனுகூலங்களை வழங்கி வருவதாகவும், உத்தியோகத்தர்களும் விவசாயிகளை நன்கு ஊக்குவிக்க வேண்டுமெனவும் தெரிவித்தார். 

மேலும், மானிய உரத்துக்காக விண்ணப்பிக்கும் விவசாயிகள் உரிய காலத்துக்குள் தமது விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கூடாக அனுப்பி வைத்தல் வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .