2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘ஆளுநர் நியமனம்தை இன ரீதியாகப் பார்க்க வேண்டாம்’

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2019 ஜனவரி 07 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிழக்கு மாகாண ஆளுநராக கலாநிதி ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டதை, இன ரீதியாக பார்க்காமல், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த ஆளுநர் பதவி கிடைத்ததாகப் பார்க்கப்படல் வேண்டுமென, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்று (07) காலை அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது  தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், முன்னாள் ஆளுநர்கள் பெரும்பான்மை சமூகத்தை சார்ந்தவர்கள், தமிழ் பேசத் தெரியாதவர்கள், மாகாண சபைகளின் தீர்மானங்களை அமுல்படுத்தத் தடையாக இருந்தவர்கள், பக்கச்சார்பாக இருந்தவர்கள் என்றெல்லாம் மிக அதிகமான குற்றச்சாட்டுகளை கிழக்கில் வாழும் இரு சிறுபான்மை சமூகங்களும் மிக நீண்டகாலமாக முன் வைத்து வந்தனர் எனத் தெரிவித்தார்.

இந்தச் சந்தர்ப்பத்தில், கிழக்கு மாகாணத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் 30 வருடகாலங்கள் இரு சமூகங்களையும் அவர்களது அடிப்படை பிரச்சினைகளையும் நன்கறிந்த தமிழ் பேசும் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கிழக்கு மாகாண ஆளுநராக கிடைத்திருப்பது தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்குடையிலான அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கான ஒரு நல்ல சந்தர்ப்பம் எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .