2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இன, மதவாதிகளின் களமாக மாறிவரும் இலங்கை

Editorial   / 2019 ஜூலை 09 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

   ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இனவாத, மதவாத சக்திகள் ஊக்கம்பெறும் களமாக இலங்கை மாறிவிட்டது என்றும்இதற்கு, இடமளிக்கப்பட்டிருப்பது ஆபத்தை விளைக்கு வாங்கும் செயலாகுமென  கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்   நஸீர் அஹமட் தெரிவித்து நேற்று  வெளியிட்டுள்ள அறிக்கையில்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;'பொது மக்களைப் பாதுகாப்பதற்கென்று கூறியே அவசர காலசட்டத்தை நீடித்துள்ளார்கள்.எனினும்  அநீதிகள் இழைக்கப்படுவதற்கு சாதமாக அவசரகால சட்ட நீடிப்பு அமைந்து விட்டதாக அநியாயமாகப் பாதிக்கப்பட்டிருப்போர் கவலை வெளியிடுகின்றனர்.அவர்களது கவலைகளை இலேசில் புறந்தள்ளிவிட முடியாது.கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்தும் மாதாந்தம் அவசரகால சட்டம் நீடிக்கப்பட்டு வருகின்றது. எனினும் தற்போதைய நிலையில் இதன் பெறுபேறுகள் முஸ்லிம் மக்களையே பெரிதும் பாதித்து வருகின்றன.இந்தச் சட்டம் அமுல் செய்யப்பட்டது முதல் இதுவரை சுமார் 3000 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் தடுப்புக்காவலிலும் இன்னும் பலர் விளக்கமறியலிலும் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பாரதூரமானவையாகத் தெரியவில்லை. இந்நிலையில் இச்சட்டம் தொடர்ந்தும் அமுல் செய்யப்படுவது முஸ்லிம் மக்களுக்கே பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதைக் கருத்தில்கொண்டு அரச தலைமைகள் இனிமேல் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து சிந்தித்துச் செயற்படவேண்டும்.அவசரகாலச் சட்டத்தின் மூலமாக எந்தவொரு சமூகமும் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. எனினும் தற்போதைய நிலையில் இதனைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு இனவாத அரசியல் சக்திகளும் மதவாதசக்திகளும் சமூகங்களைப் பாதிக்கும் கைங்கரியங்களை அரங்கேற்றி வருகின்றன.குறிப்பாக எதிர்கால தேர்தல் வெற்றிகளை நோக்கமாக கொண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கோடும் பரப்புரைகளும், பிரசாரங்களும் செயல்வேகம் பெற்று வருகின்றன.இதற்கு ஒத்தாசையாக சில இனவாத மதவாத ஊடகங்களும் செயற்பட்டு வருகின்றன.  முஸ்லிம் சமூகத்தின்மீது உண்மைகளுக்குப் புறம்பான பொய்யான இட்டுக்கட்டல்களும் அவதூறுகளும் பரப்பப்படுகின்றன.

 சமகாலத்தில் நடந்தேறிய இனரீதியான   சம்பவங்களால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் துயர்துடைக்கும் நடைமுறைகள்கூட மந்தகதியிலேயே நடைபெற்று வருகின்றன.சட்ட, நிர்வாக, அதிகாரங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள்கூட பாரபட்சமாக நடந்துகொள்கின்றனர் என மக்கள் குறைகூறுகின்றனர்.இவ்வாறான பாரதூரமான நிலைமைகள் தொடர்ந்தும் ஏற்பட்டு வருவதைக் கருத்திற் கொண்டு இவற்றைக் கட்டுப்படுத்த அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .