2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

’இனம் சார்ந்த பற்றுதி இருந்தால் துயர் துடைக்கப்படும்’

Editorial   / 2020 ஜூலை 07 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம்

ஒரு மலசலகூடத்தைக்கூடக் கட்டிக்கொடுக்க முடியாத தமிழ்த் தலைமைகள்தான் இன்று, நாடாளுமன்றத்தில் பிரநிதித்துவம் செய்து கொண்டிருக்கிறார்களென, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் டொக்டர் அசோகன் ஜூலியன் பாலசிங்கம் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு, இன்று (07) கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், தமது தமிழ்த் தலைமைகள், இன்றுவரை தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கவில்லை என்றார்.

இந்நிலையில், ஒரு நேர்மையான அரசியல் கலாசாரத்தின் ஊடாக மக்கள் சேவையைச் செய்ய வேண்டும் எனும் நோக்கிலேயே, தேர்தலில் தான் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

“எம் சமூகம், இனம் சார்ந்த பற்றுறுதி, விசுவாசம் என்பவற்றைத் தமிழ்த் தலைமைகள் முதலில் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான், எமது மக்களின் துயர் துடைக்கப்படும்” எனவும், அசோகன் ஜூலியன் பாலசிங்கம் தெரிவித்தார்.

அத்துடன், மட்டக்களப்பில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி, இம்மாவட்டத்தில் வாழும் மக்கள் சந்தோசமாக வாழ்வதற்கான சந்தர்ப்பத்தைத் தான் ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .