2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இராணுவத்தினர் வசமிருந்த 8.5 ஏக்கர் காணி விடுவிப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 28 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில், இராணுவத்தினர் வசமிருந்த 8.5 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு, அதற்கான ஆவணங்கள், உத்தியோகபூர்வமாக இராணுவத்தினரால் நேற்று (27) கையளிக்கப்பட்டது.  

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதி செயலணியினால் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைவாகவே இக்காணி விடுவிக்கப்பட்டது. அதற்கான ஆவணங்களை, கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் கபில அநுர ஜெயசேகரவினால் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவிடம் உத்தியோக பூர்வமாகக் கையளித்தார்.

அந்த ஆவணங்களை, ரோஹித போகொல்லாகம, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறீகாந்திடம் கையளித்தார். இந்த வைபவம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்றது.  

விடுவிக்கப்பட்ட 8.5 ஏக்கர் காணியில், மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவில்.2.5 ஏக்கரும், மண்முனை தென்எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஓந்தாச்சிமடத்தில் 0.5 ஏக்கரும், பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கொக்கட்டிச்சோலையில் 0.75 ஏக்கரும் வெலிக்கந்த பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தோனிதாண்டமடுவில் 5 ஏக்கர் காணியும், அடங்குகின்றன.   

இதில், 5 ஏக்கர் மகாவலி அதிகார சபைக்குட்பட்ட அரச காணியாகும். ஏனைய 3.5 ஏக்கர் காணி பொது மக்களின் காணியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .