2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘எதிர்கால சந்ததியினரை காப்பாற்ற முடியாது’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைக்கெதிரான போரைத் தொடங்கினாலன்றி, நாட்டில் எதிர்கால சந்ததியினரைக் காப்பாற்ற முடியாதென, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட், எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏறாவூரில் நவீன தரத்திலான ஆடைகளை, சர்வதேச சந்தைக்குத் தயார்படுத்தும் மற்றுமோர் ஆடைத் தொழிற்சாலை திறக்கப்படவுள்ளமை பற்றியும் இளைஞர்களுக்கான தொழில்வாய்ப்புப் பற்றியும் இடம்பெற்ற, அவரது ஏறாவூர் அலுவலகத்தில் இன்று (18) ஆலோசனைக் கூட்டத்திலேயே, அவர் இக்கருத்தை வெளியிட்டார்.

அங்கு நகர சபை உறுப்பினர்கள், அலுவலர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், இளைஞர்கள் மத்தியில் மேலும் அவர் உரையாற்றுகையில், அடுத்தாண்டு பெப்ரவரி மாதம், ஏறாவூரில் சர்வதேச உற்பத்தித் தரமுடைய ஆடைத் தொழிற்சாலை அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளதெனக் குறிப்பிட்டார்.

சுமார் 400 பேர் நேரடியாகவும் கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையுடைய ஏனைய தொழிலாளர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்ட அவர், தொழிலகங்களில் பணிபுரிவோர், நன்கு பயிற்சி பெற்றவர்களாகவும், நாட்டின் மனித வளமாகவும் கருதப்படுவது ஒரு புறமிருக்க, இன ஐக்கியத்தை வளர்ப்பதற்கும் கூட்டாகப் பணியாற்றும் சந்தர்ப்பம் அமைந்து விடுவதாகத் தெரிவித்தார்.

இதேவேளை, தொழில் வாய்ப்பின்றி அலையும் இளைஞர்கள், நாளடைவில் விரக்தியடைந்த நிலையில், போதைக்கு அடிமையாக, சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதற்கும் நாட்டைக் குட்டிச் சுவராக்குவதற்கும் சந்தர்ப்பம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே, இத்தகைய நிலைமைகளிலிருந்து இளைய சமுதாயத்தினர் அவர்கள் எந்தச் சமூகத்தினராக இருந்தாலும், அவர்களை மீட்டெடுக்க வேண்டுமென்றும், நாட்டின் ஒட்டுமொத்த சமூகத்தையே சீரழிக்க வல்ல போதையை ஒழிப்பதில், அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டுமென்றும், முன்னாள் முதலமைச்சர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .