2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஒரு கி.கிராம் சம்பா நெல் ரூ. 41க்கு கொள்வனவு செய்யத் தீர்மானம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஜனவரி 09 , பி.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு மாவட்டத்தில், சம்பா நெல் ஒரு கிலோகி​ராமை, 41 ரூபாய்க்குக் கொள்வனவு செய்யத் தீர்மானித்துள்ளதாக, விவசாயிகளின் திட்ட முகாமைத்துவக் குழுத் தலைவர் கே.யோகவேல் தெரிவித்தார். 

உன்னிச்சை, றூகம் உட்பட பல பிரதேசங்களில் நெல் கொள்வனவில் ஏற்பட்டு, விலை வீழ்ச்சி தொடர்பாகவும் தனியார் நெல்லைக் குறைந்த விலையில் கொள்வனவு செய்வது தொடர்பாகவும், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாருடன் நடத்திய கலந்துரையாடலின் அடிப்படையில், நெல் சந்தைக் கொள்வனவு சபையால் விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்யத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மாவட்ட அரசாங்க அதிபருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் அடிப்படையில், எதிர்வரும் 22ஆம் திகதி தொடக்கம் நெல் சந்தைக் கொள்வனவு சபையால் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்ய மாவட்ட அரசாங்க அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அன்றைய தினத்திலிருந்து விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளது. 

இதனடிப்படையில், ஒரு கிலோகிராம் சம்பா நெல் 41 ரூபாக்கும் ஏனைய வகையான நெல் ஒரு கிலோகிராம் 38 ரூபாக்கும் கொள்வனவு செய்வதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அத்தோடு, வாழைச்சேனை மற்றும் வவுணதீவு பிரதேசங்களில் 1,500 மெட்ரிக்தொன் நெல்லை களஞ்சியப்படுத்தக் கூடிய நெற் களஞ்சியசாலைகளையும், மாவட்ட அரசாங்க அதிபர் நிர்மாணித்துத் தரவள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய வகையில், இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .