2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஓட்டமாவடி, பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

எம்.எம்.அஹமட் அனாம்   / 2018 செப்டெம்பர் 04 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓட்டமாவடி, பிரதேச செயலாளர் பிரிவில் நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (03) மாலை நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது

இதன் போது, குடிநீர் வழங்கல், பிரதேசங்களின் உள் வீதிகளின் அபிவிருத்திகள், ஓட்டமாவடி மீறாவோடை ஆற்று தடுப்புசுவர்  தொடர்பில் ஆராயப்பட்டதுடன், காவத்தமுனை பிரதேசத்தின் ஒரு பகுதியினருக்கு பயன்படுத்துவதற்கு நீர் இன்மையால் அப்பகுதி மக்களின் நலன் கருதி குழாய் நீர் திட்டத்தை பெற்றுத்தருமாரும் காவத்தமுனை முஸ்லீம் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர் ஜெஸீமா  கோரிக்கை முன்வைத்தார்.

அதற்கமைய, கல்குடாத் தொகுதிக்கான மூன்றாம்கட்ட குழாய் நீர் திட்டம் பதின்மூவாயிரம் மில்லியன் ரூபாய் நீதியொடுக்கீட்டில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அத்திட்டம் நிறைவு செய்யப்படும் பட்சத்தில் கல்குடாத் தொகுதியிலுள்ள அனைத்து பிரதேசத்திற்குமான குடிநீர் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று தெரிவித்தார்.

குழாய் நீர் திட்டம் முடிவடைவதற்குள், காவத்தமுனையில் குடிநீரின்றி பாதிக்கப்பட்ட மக்களின் அவசர தேவையை கருத்திற்கொண்டு, குழாய் கிணறொன்றை அமைத்து அதன் மூலம் நீரை பெற்றுத்தருவதற்கான வசதிகளை செய்து தருவதாகவும் அமைச்சர் வாக்குறிதியளித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .