2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘கட்டாக்காலிகள் ஏலம் விடப்படும்’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2020 ஜனவரி 09 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூர் நகரின் மத்தியில் அலைந்து திரியும் உரிமையாளர்களால் கட்டுப்படுத்தப்படாத கட்டாக்காலிகள் கைப்பற்றப்பட்டு, ஏலத்தில் விடப்படுமென ஏறாவூர் நகர சபையால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏறாவூரை ஊடறுத்துச் செல்லும்  கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் கட்டாக்காலிகளின் நடமாட்டத்தால் அவ்வப்போது விபத்துகள் சம்பவிக்கின்றன.

இதனைக் கருத்திற்கொண்டு, இம்மாதம் 05ஆம் திகதி தொடக்கம் பிரதான வீதியில் நடமாடும் கட்டாக்காலி ஆடு, மாடுகளைக் கைப்பற்றும் நடவடிக்கைகள், ஏறாவூர் நகர சபையால் முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வாறு கைப்பற்றப்படும் கால்நடைகளை, அவற்றின் உரிமையாளர்கள் அடையாளம் காட்டி, நகர சபைக்கு ஏற்பட்ட செலவீனங்களுக்காக அபராதம் செலுத்தி, விடுவித்துச் செல்ல வேண்டும்.

இல்லையேல்  கைப்பற்றப்பட்ட கட்டாக்காலிகள், மேல் நடவடிக்கைக்காக நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு, நீதிமன்ற அனுமதியினூடாக, நகர சபை முன்றலில் பகிரங்க ஏலத்தில் விற்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கால்நடை உரிமையாளர்களுக்கு ஏற்படும் எந்தவொரு நட்டத்துக்கும் நகர சபை எவ்விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாதெனவும், ஏறாவூர் நகர சபை அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .