2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

காணி உரிமை கோரி கவனயீர்ப்பு போராட்டம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு - ஆரையம்பதி பிரதேசத்தின் ஈனிசியர் தோட்டத்திலுள்ள காணி, தமது பாரம்பரியக் காணியென, பொதுமக்கள் சிலர், கவனயீர்ப்புப் போராட்டமொன்றில் இன்று (15) ஈடுபட்டனர்.

தமது பூர்வீகக் காணியைச் சுவீகரித்து, அங்கு குளம் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தாம் கண்டிப்பதாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.

கிழக்கு மாகாண காணி ஆணையாளரைச் சந்தித்து, அவரை அழைத்து, தமது காணிகளைக் காண்பித்ததாகவும் இதனையடுத்து பொதுமக்களின் காணிகளை பொதுமக்களுக்கு வழங்கி விட்டு, ஏனைய காணிகளை அரசாங்கம் எடுக்குமாறும் அதுவரை எந்தவோர் அபிவிருத்தி நடவடிக்கையையும் இந்தக் காணியில் மேற்கொள்ள வேண்டாமென, சம்பந்தட்ட அதிகாரிகளுக்கு ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார் எனவும் அவர்கள் தெரிவித்தார்.

இதனையும் தாண்டி, தமது காணிகள் சுவீகரிக்கப்பட்டு, அதற்குள் குளத்துக்கான அகழ்வு நடவடிக்கைகள் நடைபெறுவதாகவும் இது சட்டவிரோதமாக காணிகளை எடுக்கும் நடவடிக்கை எனவும் உடனடியாக இதைத் தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

சுமார் 03 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இக்காணி 13 பேருக்குச் சொந்தமெனவும் இவர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .