2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘கிடைத்த வாய்ப்புகளை நழுவ விட்ட வரலாறுகளே அதிகம்’

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2019 ஏப்ரல் 18 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிறுபான்மை சமூகங்களின் குரலாக ஓங்கி ஒலிப்பதற்கு நாடாளுமன்றத்திலே கிடைத்த வாய்ப்புகளை  நமது அரசியலவாதிகள் நழுவ விட்ட சந்தர்ப்பங்களே அதிகமென, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

எதிர்வரப் போகின்ற தேர்தல்கள் தொடர்பாக இன்று (18) கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில், இதுவரை காலமும் நாங்கள் நம்பியிருந்த அரசியல் தலைமைகள் சாதித்தவைகளைப் பற்றி கேள்வி எழுப்பும் காலம் நெருங்கிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

ஏமாற்று அரசியலில் இருந்து விடுபட வேண்டிய காலம் வெகு தூரத்தில் இல்லை எனவும் ஏமாற்று அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக தமது ஏமாற்று அரசியலைச் செய்து பிழைப்பு நடத்த முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

சமூகத்திலுள்ள அரசியல்வாதிகளில் பலர் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றி மக்களுக்குத் துரோகத்தையே செய்து வந்திருக்கின்றார்கள் எனக் குற்றஞ்சாட்டிய நஸீர் அஹமட், ஒரு புறம் இனவாதம், மறுபுறம் சுயநலம் உள்ளிட்ட அரசியல் துரோகத்தனங்களில் முஸ்லிம் சமூகம் சிக்கியுள்ளதாகக் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .