2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சனநடமாட்டம் குறைவு: வியாபார நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம்

Editorial   / 2020 ஏப்ரல் 01 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அலுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம், கிழக்கு மாகாணத்தில் இன்று (1) தளர்த்தப்பட்டதன் பின்னர், பொதுமக்களின் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று உணவகங்கள், புடவைக்கடைகள், வீதியோர வியாபாரங்கள் போன்றவைகளைத் திறப்பதற்கு பிரதேசசபை அனுமதி வழங்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த தினங்களில் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட போது, அதிகளவிலான பொதுமக்கள் முண்டியடித்துக்கொண்டு பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வந்தததை அவதானிக்க முடிந்தது என்றும்  ஆனால் இன்றைய தினம் ஓட்டமாவடி, வாழைச்சேனை, மீராவோடை போன்ற பிரதேசங்களில் மக்களின் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.  

அத்தோடு பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்குச் சென்று பொலிஸார் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கினர்.

பொதுமக்களின் வருகை இன்மையால் வியாபார நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .