2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘சுரேஸுடனான தொடர்பு துண்டிப்பு’

கே.எல்.ரி.யுதாஜித்   / 2020 பெப்ரவரி 17 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) செயற்பாட்டுக்கும் தனக்கும் உள்ள செயற்பாடுகளை தனது தனிப்பட்ட நலன் கருதி நிறுத்தியுள்ளதாக, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் சிரேஸ்ட உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “கட்சியின் பெயரை மாற்றம் செய்து, புதுத் தலைமையை  வடக்கில் உருவாக்குவதற்கு முழு ஒத்துழைப்பை வழங்கியவன் என்ற அடிப்படையில்,  கிழக்கில் வாக்குகள் பிரிபடக் கூடாது என்பதற்காக கடந்த காலத்தில் மாகாண சபை, நாடாளுமன்றத் தேர்தல்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து செயற்பட்டுள்ளேன்.

“எதிர்காலத்திலும் மேற்படித் தேர்தல்களிலும், ஏனைய பொதுவான விடயங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பங்குதாரர்களாக என்னையும் ஒரு குழுவாக  இணைத்துக் கொள்ளுமாறு, கூட்டமைப்பைக் கோரியுள்ளேன்.

“இவ்விடயம் தொடர்பாக, கடந்த காலத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டவன் என்ற வகையில்,  நாடாளுமன்றத் தேர்தலில் இணைந்து செயற்பட விரும்பியுள்ளதோடு, இந்த முடிவுக்கும் சுரேஸ் பிரேமச்சந்திரான தலைமைக்கும் எவ்வித  தொடர்பும் இல்லை. இவை எனது தனிப்பட்ட முடிவுகளே.

“எனக்கும் கட்சியில் உள்ளோருக்கும் எவ்வித தனிப்பட்ட முரண்பாடுகளும் இல்லை என்பதோடு, அனைவரும் சிறப்பானவர்கள். எனது தனிப்பட்ட உறவு அனைவருடனும் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .