2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’தமிழர்கள் அடிமையாகும் நிலை’

Editorial   / 2018 ஓகஸ்ட் 26 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ், நடறாஜன் ஹரன்

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இன விகிதாசாரம் குறைந்து கொண்டே செல்கின்றது என்று கூறியுள்ள, கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூ.பிரசாந்தன், அரசியல் பாரம்பரியம் பேசிக்கொண்டு, காலத்தை இழுத்தடித்தால், கிழக்கில் தமிழர் அரசியல் அடிமையாகும் நி​லையே ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

சமகால அரசியல் தொடர்பாக, நேற்று (26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
30 வருட அரசியல் போராட்டங்களின் விளைவாகக் கிடைத்த ஆகக்குறைந்த அதிகாரமான மாகாணசபை முறைமையையும் கிழக்கு தமிழர்கள் அனுபவிக்க முடியாது வேடிக்கை பார்க்கும் நிலைக்கு மாற்றப்பட்டது என்று கூறிய அவர், 2008-2012ஆம் ஆண்டு வரை, கட்சியின் தலைவர் சிவ.சந்திரகாந்தன், கிழக்கு மாகாண முதலமைச்சராக பொறுப்பேற்று தமிழரின் இருப்பை நிலைநாட்டியிருந்தார் என்றும் கூறினார்.

ஆனால், 2012ஆம் ஆண்டுக்குப் பின்னரும் 2015ஆம் ஆண்டுக்குப் பின்னரும், கிழக்குத் த​மிழர்கள், நசுக்கப்பட்டார்கள் என்றும் ஆனால், தமிழரின் இருப்பை இல்லாமல் செய்யும் செயற்பாட்டில் யார் ஈடுபட்டாலும் அதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

எனவே, அரசியல் கட்சிகள் வடக்குடன் ஒப்பிட்டோ அல்லது ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிட்டோ காலத்தை போக்குவதை ஒத்திவைத்துவிட்டு, கிழக்கு மாகாண மக்களின் எதிர்காலம் குறித்து திறந்த மனதுடன், இதயங்களைப் பேசவைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

வாய் வார்த்தையால் பேசிவிட்டுச் செல்லக்கூடாது என்றும் கிழக்கு மாகாணத்தின் தமிழர்களின் இருப்புக்காக வலுவான எதிர்காலத்துக்காக, எவ்விதமான ஏற்றுக் கொள்ளக்கூடிய விட்டுக் கொடுப்புகளுடனும் பேசுவதற்கு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தயாராக உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .