2024 மே 08, புதன்கிழமை

திண்மக்கழிவகற்றல் பிரச்சினை: தீர்வுக்கு இரண்டு வாகனங்கள் கொள்வனவு

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2019 ஜனவரி 20 , பி.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்துவதற்காக, மாநகர சபையினால் இரண்டு புதிய கனரக ட்ரக் வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. 

கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்பின் முயற்சியில், சபை நிதியில் இருந்து சுமார் 108 இலட்சம் ரூபாய் செலவில் கொள்வனவு செய்யப்பட்டுள்ள இந்த வாகனங்கள், அடுத்த ஒரு சில தினங்களுக்குள் சேவையில் ஈடுபடும் என்று தெரிவிக்கப்படுகின்றது.  

திண்மக்கழிவகற்றல் சேவையை முன்னெடுப்பதில் மாநகர சபை எதிர்நோக்கி வருகின்ற பாரிய சவாலை வெற்றி கொண்டு, வினைத்திறன் மிக்க சேவையை முன்னெடுக்கும் பொருட்டு, முதல்வர் பதவியை பொறுப்பேற்றது தொடக்கம் தாம் மேற்கொண்டு வருகின்ற மூலோபாய திட்டத்தின் முதற்கட்டமாகவே இவ்விரு வாகனங்களும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஏ.எம்.றகீப் தெரிவித்தார். 

இந்த ஒரு வாகனத்தில், ஒரு தடவையில், எட்டு தொண் குப்பைகளைச் சேகரிக்க முடியும் எனவும் இவை நீண்ட தூரம் சென்று, குப்பைகளை கொட்டுவதற்கேற்ற வலுவைக் கொண்டவை என்றும் அவர் கூறியுள்ளார்.  

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் நாளாந்தம் 80 தொண் குப்பைகள் சேர்வதாகவும் அவற்றுள் 50 சதவீதமான குப்பைகளையே மாநகர சபையினால் தினசரி சேகரித்து அகற்ற முடியுமாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள முதல்வர் ஏ.எம்.றகீப், வாகன மற்றும் ஆளணிப் பற்றாக்குறையும் கல்முனையில் குப்பை கொட்டுவதற்கான இடமொன்று இல்லாதிருப்பதால், சுமார் 30 கிலோ மீற்றர் தூரம் சென்று அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பள்ளக்காட்டில் அவற்றை கொட்ட வேண்டியிருப்பதாலுமே திண்மக்கழிவகற்றல் சேவையை சிறப்பாக முன்னெடுப்பதில் பெரும் சவாலை எதிர்நோக்க நேரிடுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X