2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘தியாகிப் பட்டம் எடுப்பதைவிட துரோகிப் பட்டம் மேலானது’

பேரின்பராஜா சபேஷ்   / 2018 நவம்பர் 25 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்களை ஏமாற்றி, கொலை செய்து தியாகிப் பட்டம் எடுப்பதைவிட மக்களுக்காகப் பணியாற்றித் துரோகிப் பட்டம் சூடிக்கொள்வதை மேலானதாகத் தான் நினைப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

கடந்த மூன்று வருடங்களாக எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஆளும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்ததால், தமிழ் மக்களுக்காக எதையும் பெற்றுக்கொள்ள முடியாது ஏமாற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, இலுப்படிச்சேனை பிரதேசத்தில் புதிதாக விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான பணிகளின் அங்குரார்ப்பண நிகழ்வு, நேற்று (24) நடைபெற்றது. அங்கு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், மஹிந்த அரசாங்கத்திலே, புனர்வாழ்வு என்ற அடிப்படையில் 11,900 முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட்டதாகவும் ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திலே 217         அரசியல் கைதிகளில், 100 பேர் மாத்திரமே விடுதலை செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் மஹிந்த ஆட்சிக் காலத்தில் 2015.03.31 அன்று 52,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் ஆனால் தாங்கள் ஆதரவு வழங்கிய ஐ.தே.கவின் ஆட்சியில் மூன்றரை வருட காலத்தில் 300 பட்டதாரிகளுக்குக்கூட வேலை வாய்ப்கைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லையெனத் தெரிவித்தார்.

 2015, 2016, 2017ஆம் ஆண்டுகளில் வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிர்க்கட்சியிலிருந்துகொண்டே த.தே.கூ ஆதரவு வழங்கியபோதெல்லாம், எவ்வளவு பணம் பெற்றுக்கொண்டீர்கள் என மக்கள் கேள்வியெழுப்பினார்கள் என்றும் வியாழேந்திரன் எம்.பி தெரிவித்தார்.

மேலும், இவை அனைத்துக்கும் மகுடம் வைத்ததுபோல, ரணில் விக்ரமசிங்கவைப் பாதுகாப்பதற்காக, நாடாளுமன்றத்தில் கைகளை உயர்த்தியும் தமிழ் மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லையென்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .