2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

திருகோணமலையில் கண்டன ஆர்ப்பாட்டம்

Editorial   / 2018 டிசெம்பர் 05 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட், அப்துல்சலாம் யாசீம்

மட்டக்களப்பு, வவுணதீவுப் பகுதியில், பொலிஸார் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டமையைக் கண்டித்து, கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று, நேற்று (04) முன்னெடுக்கப்பட்டது.  

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தை, தமிழர் ஜனநாயக மய்யம் ஏற்பாடு செய்திருந்தது.  

வவுணதீவில் கடமையிலிருந்த இரு பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, புனர்வாழ்வு பெற்று வெளியில் வாழ்கின்ற தமிழ் இளைஞர்கள், மிகவும் பீதியில் இருப்பதாகவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.  

அத்துடன், இவ்விவகாரம் தொடர்பில் முன்னாள் போராளிகள், எல்லைப்புறக் கிராமங்களில் வாழ்கின்ற போராளிகளின் குடும்பங்கள் குறி வைக்கப்படுவதை நிறுத்தி, நீதியானதும் நியாயமானதுமான விசாரணைகள் நடத்தப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் கைதுசெய்யப்பட வேண்டுமென்றும் அவர்கள் கோரினர்.  

​மேலும், தமிழ் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல், அரசாங்கமும் பொலிஸ் திணைக்களமும் செயற்பட வேண்டும் எனவும், அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.  

இதேவேளை, மேற்படி கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை, கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்தனவிடம், தமிழர் ஜனநாயக மய்யத்தினர் வழங்கினர்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .