2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பிரதமர், மட்டக்களப்புக்கு உத்தியோகபூர்வ விஜயம்

கே.எல்.ரி.யுதாஜித்   / 2018 ஜூலை 20 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கோண்டு, எதிர்வரும் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வருகைதந்து, பல அபிவிருத்தித்திட்டங்களை ஆரம்பித்து வைக்க இருப்பதாக அரசாங்கத்தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.

மட்டக்களப்புக்கு வருகைதரும் பிரதமர், அன்றைய தினம், முற்பகல் 10 மணிக்கு ஆரையம்பதியில் சுமார் 40 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மண்முனைப்பற்று பிரதேச செயலகத்துக்கான புதிய மாடிக் கட்டடத் தொகுதியை வைபவ ரீதியாகத் திறந்து வைப்பதுடன், அரச உத்தியோகத்தர்களுக்கு அலுவலகப் பைகளை வழங்குவதுடன், வறிய மக்களுக்கு வாழ்வாதார உதவிகளையும் வழங்கி மர நடுகையிலும் பங்கு கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், முற்பகல் 11 மணியளவில் ஏறாவூர் நகரில் புதிதாக சுமார் 40.5 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரதேச செயலகத்துக்கான புதிய 3 மாடிக் கட்டடத்தையும் பிரதமர் திறந்து வைப்பதுடன், அரச உத்தியோகத்தர்களுக்கான அலுவலகப் பைகள் மற்றும் வறிய மக்களுக்கு வாழ்வாதார உதவிகளையும் வழங்கிவைத்து மரநடுகையிலும் ஈடுபடுவார்.

பிரதமரின் இந்த  விஜயம் தொடர்பாக உத்தியோகபூர்வ ஏற்பாடுகளைத் திட்டமிடும் விசேட கூட்டம், மாவட்ட அரசாங்க செயலாளர் காரியாலயத்தில் மேலதிக செயலாளர் திருமதி சுதர்சினி சிறிகாந்த் தலைமையில் நேற்று (19) நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு அரசியல் பிரமுகர்களின் பிரதிநிதிகள், முப்படைகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், மற்றும் திணைக்களத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

குறித்த விஜயத்தின் போது நடைமுறைப்படுத்தவுள்ள திட்டங்களின் முன்னோடி ஏற்பாடுகள் பற்றியும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் பற்றியும் ஆராயப்பட்டதாக ஊடகப்பிரிவுத் தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .