2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்படும் மாவட்டமாக மட்டு. மாவட்டம்’

வா.கிருஸ்ணா   / 2018 நவம்பர் 27 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் பெண்கள் அதிகளவில் புற்றுநோயால் பாதிக்கப்படும் மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இனங்காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்த குடும்பத் திட்டமிடல் சங்க மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் இம்தியாஸ், தாய்ப்பால் ஊட்டுவது குறைவதன் காரணமாகவே, மார்புப் புற்றுநோய் அதிகரிப்பதாகவும் தெரிவித்தார். 

தனிநபர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, உறவுகளை செழிப்படையச் செய்யும் வகையில், பாலியல், இனவிருத்தி, சுகாதாரம் தொடர்பில் பொதுமக்களை அறிவுறுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான வழிப்புணர்வு நடவடிக்கைகளை, மட்டக்களப்பு மாவட்ட குடும்ப திட்டமிடல் சங்கம் மேற்கொண்டு வருகின்றது.

இதன்கீழ், மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட புதூர் பகுதியிலுள்ள பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான கூட்டம், இன்று (27) காலை நடைபெற்றது.

குடும்பத் திட்டமிடல் சங்க மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் இம்தியாஸ், நிகழ்ச்சி உத்தியோகத்தர் எல்.சி. யோகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினர்.

இதன்போது பெண்களுக்கு பல்வேறு வகையான விழிப்புணர்வுக் கருத்துரைகள் வழங்கப்பட்டன.

குறிப்பாக பிள்ளைகளுக்குத் தாய்ப்பால் ஊட்டுவதன் முக்கியத்தும், தாய்ப்பாலின் மகத்துவம், தாய்ப்பால் ஊட்டுவதால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்த விளக்கங்களும் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .