2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

போர் முடிவுக்கு வந்தமையால் ’சுதந்திரமான கற்றல் செயற்பாடுகள்’

Editorial   / 2018 ஜூலை 17 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ்

 

தமது பாடசாலைக் காலங்களில், நாட்டில் "பயங்கரவாதம்" காணப்பட்டதெனத் தெரிவித்த தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்திப் பிரதியமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், எனினும் தற்போது நிம்மதியாகவும் சுதந்திரமாகவும், மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதெனவும் தெரிவித்தார்.

மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் 39ஆவது உயர்தர தின நிகழ்வு, கல்லூரி அதிபர் பி.எம்.எம்.பதுறுதீன் தலைமையில் நேற்று முன்தினம் (16) நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, பிரதியமைச்சர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து இங்கு உரையாற்றிய அவர், "கல்வி அபிவிருத்திக்காக நல்லாட்சி அரசாங்கம் கூடுதலான நிதியைச் செலவுசெய்து வருகின்றது. பரீட்சை எனும்போது, சிலருக்கு பல்கலைக்கழகம் கிடைத்துவிடுகிறது, சிலருக்குக் கிடைக்காமல் போகிறது. அதற்காக மாணவர்கள் மனமுடைந்து விடக்கூடாது. சமூகத்தில் கல்வியியலாளர்களாக உருவாகுவதற்கு, பல வழிமுறைகள் இன்று திறந்து விடப்பட்டிருக்கிறன. இதனை மாணவர்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.

"சமூகம் சார்ந்த விடயங்கள் நாடாளுமன்றத்தில் வருகின்ற போது, எல்லா உறுப்பினர்களும் ஒன்றுபட்டுச் செயற்படுவதில் சிவில் சமூக அமைப்புகள் பலமடைய வேண்டும்" எனக் கூறினார்.

மேலும், "கல்முனைத் தொகுதியில் முதன்முதலாக உருவாக்கப்படுகின்ற தேசிய பாடசாலையான மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியை, கல்முனைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் சிபாரிசு செய்து, தரமுயர்த்தித் தருவேன்" எனவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .