2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய மக்கள்

Editorial   / 2020 ஏப்ரல் 01 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம் 

மட்டக்களப்பு மாவட்டத்தில், பொலிஸ் ஊரடங்குச்சட்டம், இன்று(3) காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட நிலையில், பெரும்பாலான பொதுமக்கள், கொரானோ அறிவுறுத்தல்களை பின்பற்றத் தவறியதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி, ஆரையம்பதி, களுவாஞ்சிகுடி, நாவற்குடா, ஏறாவூர், செங்கலடி போன்ற பிரதேசங்களில், வர்த்தக நிலையங்களிலும், நடைபாதை வியாபார நிலையங்களிலும், சமூக இடைவெளியைப் பேணாது, பொதுமக்கள் கூடிநின்று பொருட் கொள்வனவில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதுகாப்புப் பிரிவினர், பொதுமக்களை வழிநடத்துவதில் அதிதீவிர நடவடிக்கை எடுத்த போதிலும் பொதுமக்கள் பலர் விழிப்படைந்ததாக தெரியவில்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இது காலப்போக்கில், கொரானோ தொற்றை மேலும் அதிகரிக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும் என்று, சுகாதார, பாதுகாப்புப் பிரிவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் அநாவசியமான பயணங்களைப் பொதுமக்கள் மேற்கொள்வதைத் தடுத்து நிறுத்துவதற்கு அறிவுறுத்தல்கள்  பல்வேறு தரப்பினராலும் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில், அவற்றை மீறுவோரை கண்காணிப்பதற்கு, மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்லாறு, கிரான்குளம், கல்லடி, பிள்ளையாரடி போன்ற பகுதிகளில் படையினர் சோதனைச்சாவடிகள் நிறுவப்பட்டு பொதுமக்களை வீடுகளில் தங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .